தைவான் நாட்டிற்கு ஆயுதம் விற்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் சீனா பனிப்போர் எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • May 25, 2020
  • Comments Off on தைவான் நாட்டிற்கு ஆயுதம் விற்பதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் சீனா பனிப்போர் எச்சரிக்கை !!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தைவான் நாட்டிற்கு 10பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அனுமதி அளித்த நிலையில் அதனை தொடர்ந்து சுமார் 180மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்கவும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்தது.

இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில் “தைவானுக்கு ஆயுதம் விற்பதையும், அனைத்து வகையான உறவுகளையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் சீன ராணுவம் சீனாவின் “அனைத்து பகுதிகளையும் தேசிய இறையாண்மையையும்” பாதுகாக்கும் என அழுத்தமாக தெரிவித்தார்.

இதற்கு ஒரு நாள் முன்னர் தான் சீன வெளியுறவு அமைச்சர் அமெரிக்க அரசியல் வைரஸ் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பனிப்போரை தூண்டுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.