
தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள பராசெல் தீவுகளை சீனா தனக்கு உரியது என உரிமை கோரி வருகிறது அவ்வப்போது தனது கப்பல்களை அங்கு அனுப்பி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் மே28 ஆம் தேதி அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை பிரிவை சேர்ந்த ஆர்லெய் பர்க் ரக நாசகாரி கப்பலான யு.எஸ்.எஸ். மஸ்டின் எனப்படும் கப்பல் பராசெல் தீவுகளுக்கு மிக அருகே பயணம் செய்துள்ளது.
இது சீனாவுக்கு அமெரிக்க அரசு விடுக்கும் மறைமுகமான எச்சரிக்கை என சர்வதேச பார்வையாளர்களால் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் ஏழாவது பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி “இந்த நடவடிக்கை மூலமாக சீனா இந்த பகுதியை உரிமை கோருவது தவறு என கூற விரும்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.