குவாம் தீவுக்கு குண்டுவீச்சு விமானங்களை அனுப்பி உள்ள அமெரிக்கா !!

  • Tamil Defense
  • May 4, 2020
  • Comments Off on குவாம் தீவுக்கு குண்டுவீச்சு விமானங்களை அனுப்பி உள்ள அமெரிக்கா !!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டையஸ் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படை தனது பி1பி லான்ஸர் விமானங்களை தென்சீனக்கடல் பகுதியில் உள்ள குவாம் தீவில் ஆன்டர்ஸன் படைதளத்திற்கு அனுப்பி உள்ளது.

இதனை அமெரிக்க விமானப்படையின் பசிஃபிக் கட்டளையகம் உறுதி செய்துள்ள நிலையில், இந்த விமானங்கள் எத்தனை நாள் அங்கு இருக்கும் என பெண்டகன் எதுவும் கூறவில்லை.

சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசியா அருகே மேற்கு கபெல்லாவில் பிரச்சினை, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை சீன கடற்படை தென் சீன கடலில் இருந்து சீனா வெளியேற்றியது என மோதல் அதிகரித்து வருகிறது.