இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா விருப்பம்
இந்திய மற்றும் சீனாவிற்கு இடையே தற்போது நடந்து வரும் எல்லைப் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் கடந்த சில நாட்களாகவே எல்லையில் மோதி வருகின்றனர்.இரு நாட்டு வீரர்களும் கற்கள் மற்றும் முட்கம்பிகள் கொண்ட தடிகளால் தாக்கி கொண்டனர்.இதனை தொடர்ந்து எல்லையில் படைக்குவிப்பு என பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் ட்ரம்ப் அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“நாங்கள் இரு நாடுகளிடமும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சமரசம் செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளோம்” என ட்ரம்ப் அவர்கள் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்பும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ட்ரம்ப் அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதை நிராகரித்த இந்தியா இது இரு நாட்டு பிரச்சனை என கூறி விட்டது.
எல்லை கோட்டின் லடாக் மற்றும் வடக்கு சிக்கிம் பகுதிகளில் இரு நாடுகளும் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது எல்லைப் பிரச்சனை மொத்தமாக கட்டுப்பாட்டிலும் நிலையாக இருப்பதாகவும் சீனா பல்டி அடித்துள்ளது.பேச்சுவார்த்தை மூலம் இவற்றை தீர்க்க இரு நாடுகளும் சரியான தீர்வை ஏற்கனவே கண்டுள்ளதாகவும் சீனா தற்போது கூறியுள்ளது.