சீனாவுடன் மோதல் போக்கு- தைவானூக்கு டோர்பிடோக்களை வழங்கும் அமெரிக்கா

  • Tamil Defense
  • May 22, 2020
  • Comments Off on சீனாவுடன் மோதல் போக்கு- தைவானூக்கு டோர்பிடோக்களை வழங்கும் அமெரிக்கா

சீனாவுக்கும் தைவானுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வரும் வேளையில் 180 மில்லியன் டாலர்களுக்கு தைவானுக்கு டோர்பிடோக்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையிலும் இந்த டோர்பிடோக்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அதிநவீன கனஎடை 18 MK-48 Mod6 டோர்பிடோக்களை வழங்க அனுமதி அளித்துள்ளது.தனது இராணுவத்திற்கு பலத்தையும் எதிரிகளுக்கு பயத்தையும் இது அளிக்கும் என தைவான் கூறியுள்ளது.இந்த டோர்பிடோக்கள் நீர்மூழ்கியில் வைத்து ஏவப்படக்கூடியது ஆகும்.

தைவான் தன்னை தானே ஆளும் ஒரு தீவு ஆகும்.இதை கைப்பற்ற சீனா துடித்து வருகிறது.சீனாவின் கோபத்தில் இருந்து தன்னை காக்க தனது இராணுவ பலத்தை பெருக்கி வருகிறது.இதற்கு அமெரிக்கா உதவி வருகிறது.

அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் எந்த தூதரக உறவும் தைவானுடன் வைத்துக்கொள்ளவில்லை.பல நாடுகள் தைவானை அங்கீகரிக்கவும் இல்லை.