1 min read
அஜித் தோவல் தரைப்படை மற்றும் துணை ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை !!
பாகிஸ்தான் சமீப காலமாக காஷ்மீரில் பயங்கரவாதிகளை அதிகளவில் தூண்டி விடுகிறது. இதனையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்து அவசர ஆய்வு மேற்கொண்டதோடு பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது உயர்நிலை கூட்டத்தில் சோபோர் , ஹன்ட்வாரா மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் அஜித் தோவல் தரைப்படை மற்றும் துணை ராணுவ உயர் அதிகாரிகளிடம் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லை கட்டுபாட்டு கோடு அருகேயான பாதுகாப்பை தீவிரப்படுத்த கேட்டு கொண்டார்.