மே 20 அன்று பெங்களூரு வான் பகுதியில் பெரும் சத்தம் கேட்டதாக அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் இணையத்தில் பதிவு செய்தனர்.அதன் பிறகு அது விமானம் ஒலியின் வேகத்தில் செல்லும் போது உருவாகும் சோனிக் பூம் என தகவல்கள் வெளியானது.
தற்போது திருப்பூரிலும் சோனிக் பூம் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காலை 10:30 மணிக்கு காங்கேயம்,பல்லடம்,அருள்புரம்,அவினாசிபுரம்,பொங்களுர்,கொடுவாய்,அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில் சோனிக் பூம் சத்தம் கேட்டுள்ளது.
கோவை சூலூர் தளத்தில் இருந்து பயிற்சிக்காக பறந்த தேஜஸ் விமானம் இந்த சத்தத்தை எழுப்பியிருக்கலாம் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளன.
சத்தம் கேட்டதை திருப்பூர் கலெக்டர் மற்றும் திருப்பூர் எஸ்பி ஆகியோரும் உறுதிபடுத்தியுள்ளனர்.இதனை உறுதிப்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சூலூர் விமானத் தளத்திற்கு சென்றுள்ளது.