
கத்தார் நாட்டில் தலிபான்கள் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியா கடந்த 40வருட காலமாக ஆப்கானிஸ்தானில் மோசமான பங்கு வகித்து வருவதாக விமர்சனம் ஒன்றை வெளியிட்டது.
தற்போது இந்த விமர்சன அறிக்கைக்கு ஆஃப்கானிஸ்தான் அரசின் வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அரசின் அறிக்கையில் இந்தியா மிக நீண்ட காலமாக ஆஃப்கானிஸ்தானுடைய நட்பு நாடாக விளங்கி வருவதாகவும், ஆஃப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருவதாகவும், கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, ராணுவம் போன்ற துறைகளில் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையிலான நட்புறவு சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது எனவும், இரு நாடுகளின் புரிதலை அடிப்படையாக கொண்டது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்கன் அரசியல் வல்லுநரான காலித் சதாத் கூறும்போது “தலிபான்களின் இந்த பேச்சுக்கு காரணம் பாகிஸ்தான் ஆகும், இந்தியாவுடனான பகை காரணமாக ஆஃப்கானிஸ்தானிலும் தலிபான்களை கொண்டு தனது நிழல் யுத்தத்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.