
சீனாவின் ஹூவாய் நிறுவனமானது உலகளாவிய அளவில் தனது தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை கட்டமைத்து உள்ளது. உலகம் முழுவதும் இந்நிறுவன பொருட்கள் இல்லாத சந்தை இல்லை எனலாம்.
மேலும் ஹூவாய் நிறுவனமானது உலகளாவிய அளவில் தகவல் திருட்டு மற்றும் உளவு போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அமெரிக்கா ஏற்கனவே ஹூவாய் நிறுவனம் மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கிலாந்தில் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவும் திட்டத்தில் ஹூவாய் நிறுவனமும் பங்கு வகிக்கிறது ஆனால் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அந்நிறுவனத்தை திட்டத்தில் இருந்து விலக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சீனாவை ஒடுக்க ஜி7 கூட்டமைப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா,ஜப்பான், இத்தாலி, ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இந்தியா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்து டி10 எனும் புதிய உலகளாவிய அமைப்பினை உருவாக்கவும் பிரிட்டன் யோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.