514 துணை இராணுவத்தினருக்கு கொரானா தொற்று-5 வீரர்கள் உயிரிழப்பு

  • Tamil Defense
  • May 9, 2020
  • Comments Off on 514 துணை இராணுவத்தினருக்கு கொரானா தொற்று-5 வீரர்கள் உயிரிழப்பு

கொரானா போரில் முன்னனி போர் வீரர்களான திகழும் துணை இராணுவ படை வீரர்கள் 514 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் காவல் படை,எல்லைப் பாதுகாப்பு படை,இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிலக காவல் படை, சஹாஸ்திர சீம பால் ஆகிய படை வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.இதில் 450 வீரர்கள் டெல்லியில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர்.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் இதுவரை கொரானா பாதிப்பிற்கு உயிரிழந்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ நெருங்கி வருகிறது.

இந்தாே திபத் எல்லைப் படையை பொருத்த வரை தற்போது பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 85ஆக உள்ளது.

மத்திய தொழிலக பாதுகாப்பு படை இது வரை 35 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது.அதில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார்.