எல்லைப் பாதுகாப்பு படை தலைமையகம் வரை சென்ற கொரானா-42 வீரர்களுக்கு தொற்று

  • Tamil Defense
  • May 5, 2020
  • Comments Off on எல்லைப் பாதுகாப்பு படை தலைமையகம் வரை சென்ற கொரானா-42 வீரர்களுக்கு தொற்று

டெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரிந்து வந்த வீரர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு இரு மாடிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தில்லியகன் லோதி சாலையில் உள்ள சி.ஜி.ஒ காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படையின் 8 தளங்கள் கொண்ட தலைமை அலுவலகத்தில் முதல் இரண்டு தளங்கள் தற்போது சீல் செய்யப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட வீரருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை பாதிக்கப்பட்ட 42 வீரர்கள் தப்லீக் மாநாடு நடைபெற்ற பகுதியில் தில்லி காவல்துறையுடன் களமிறக்கப்பட்ட 92பேர் கொண்ட எல்லை பாதுகாப்பு படையின் அணியில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு எல்லை பாதுகாப்பு படைக்கு உரியதாகும் இதை தவிர உள்நாட்டு பாதுகாப்பு பணியிலும் பெரிய பங்களிப்பு கொண்டுள்ளது.