Day: May 28, 2020

400 சிஆர்பிஎப் வீரர்களுக்கு குறிவைத்த ஜெய்ஸ் பயங்கரவாதிகள்-முறியடித்த வீரர்கள்

May 28, 2020

இன்று (வியாழன்) புல்வாமாவில் கண்ணிவெடி நிறைந்த கார் ஒன்றை வீரர்கள் கண்டறந்து அதில் இருந்த கண்ணிவெடிகளை பத்திரமாக வெடிக்கச்செய்து மற்றும் ஒரு புல்வாமா போன்ற தாக்குதலை வீரர்கள் தடுத்துள்ளனர்.20 வாகனங்களில் சென்ற 400 சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து தாக்க ஜெய்ஸ் பயங்கரவாதிகள் முயன்றுள்ளனர். இந்த 20 வாகனங்களும் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு செல்லும் வழியில் தான் இந்த கார் நமதுவீரர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பக்ஷி ஸ்டேடியத்தில் இருந்து 7 மணிக்கு வீரர்கள் குழு கிளம்பியிருக்க வேண்டும்.அவர்கள் ஜம்முவை நோக்கி […]

Read More

பெங்களூருவுக்கு பிறகு திருப்பூரிலும் கேட்ட “சோனிக் பூம்” சத்தம்

May 28, 2020

மே 20 அன்று பெங்களூரு வான் பகுதியில் பெரும் சத்தம் கேட்டதாக அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் இணையத்தில் பதிவு செய்தனர்.அதன் பிறகு அது விமானம் ஒலியின் வேகத்தில் செல்லும் போது உருவாகும் சோனிக் பூம் என தகவல்கள் வெளியானது. தற்போது திருப்பூரிலும் சோனிக் பூம் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காலை 10:30 மணிக்கு காங்கேயம்,பல்லடம்,அருள்புரம்,அவினாசிபுரம்,பொங்களுர்,கொடுவாய்,அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில் சோனிக் பூம் சத்தம் கேட்டுள்ளது. கோவை சூலூர் தளத்தில் இருந்து பயிற்சிக்காக பறந்த தேஜஸ் விமானம் இந்த சத்தத்தை […]

Read More

இந்திய ஆளில்லா உளவு விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் பாக் ஜெனரல் !!

May 28, 2020

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் ஆளில்லா இந்திய உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் தான் சுட்டு வீழ்த்தியது என தெரிவித்தார். கடந்த புதன்கிழமை அன்று எல்லை கட்டுபாட்டு கோடருகே ராக்சிக்ரி செக்டாரில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். இந்த விமானம் அதிக தூரம் உள்ளே வந்ததாக பாக் தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

ஜப்பான் கடல்பகுதியில் சீனா ரவுடிசம்; கடும் கோபத்தில் ஜப்பான் !!

May 28, 2020

கொரோனா பாதிப்பு நேரத்தில் சீனா தன்னை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தனது ஆதிக்கத்தை அதிகபடுத்த முயற்சி செய்கிறது, இந்திய எல்லை, மலேசிய கடல் பகுதி, வியட்நாமிய கடல்பகுதி என சுற்றி சுற்றி பல நாடுகளை தேவை இன்றி சீண்டி வருகிறது. சமீபத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஜப்பானுடைய டைய்யோ தீவு அருகே அத்துமீறி நுழைந்த சீன கடலோர காவல்படையின் நான்கு கப்பல்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த ஜப்பானிய படகுகளை விரட்டி அட்டுழியம் செய்துள்ளன, இதில் இரண்டு சீன […]

Read More

எல்லையோர உள்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும் இந்தியா, புதிய சுரங்க பாதை விரைவில் திறப்பு !!

May 28, 2020

சீனா மற்றும் இந்தியா இடையே தொடர்ந்து பதட்டம் நிலவி வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து தனது பக்கத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீன எல்லைக்கு போக்குவரத்து வசதி அளிக்கும் ஒரு சுரங்க பாதை உத்தராகண்ட் மாநிலத்தில் தனது கட்டுமான பணிகள் முடிவடையும் காலத்தை நெருங்கி வருகிறது. எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு உத்தராகண்ட் மாநிலத்தில் சம்பா சுரங்க பாதையின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் அடுத்த வருடம் ஜனவரியில் முடிய வேண்டிய […]

Read More

பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் ஸ்குவாட்ரான்-தமிழகத்தில் தற்போது செயல்பாட்டை தொடங்கியுள்ளது

May 28, 2020

பிளையிங் புல்லட்கள் எனப்படும் இரண்டாவது தேஜஸ் ஸ்குவாட்ரான் தற்போது தமிழகத்தின் சூலூரில் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.வீரதீர சாகசத்திற்காக பெயர் போன இந்த ஸ்குவாட்ரான் தற்போது சூலூரில் செயல்பாட்டை தொடங்கியது.இந்திய விமானப்படையில் பரம்வீர்சக்ரா விருது பெற்ற ஒரே வீரரான நிர்மல்ஜித் செகான் அவர்கள் பணியாற்றிய ஸ்குவாட்ரான் தான் பிளையிங் புல்லட் ஸ்குவாட்ரான்..அவரது வீரதீர சாகசம் இதோ… இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான் விமானப்படையின் சிறந்த அதே சமயம் மிகத் திறமை வாய்ந்த வீரர் தான் […]

Read More

இந்திய விமானப்படையின் முன்னர் சீன விமானப்படையின் பலவீனங்கள் !!

May 28, 2020

அடிப்படையில் ஒரு வான்வெளி போரை வெற்றிகரமாக நடத்த வேண்டுமெனில் எல்லைக்கு அருகில் போர்விமானங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும் அதாவது எல்லையில் இருந்து 200-300கிமீ தொலைவில் நிறுத்தப்பட வேண்டும். சீனா தனது போர் விமானங்களை இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திலும் அதன் அருகில் அள்ள ஸின்ஜியாங் மாகாணத்திலும் நிறுத்தியுள்ளது. சீன விமானப்படையில் சுமார் 2100 போர்விமானங்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பகுதி சீனாவின் கிழக்கு பகுதியில் தான் நிறுத்தி வைக்க முடியும், இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்தில் நிறுத்த முடியாது காரணம் […]

Read More

புல்வாமாவில் மீண்டும் காரில் கண்ணிவெடி-அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்

May 28, 2020

புல்வாமாவில் மீண்டும் காரில் கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சன்ட்ரோ காரில் இந்த ஐஇடி-யை வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.புல்வாமாவின் ராஜ்புரா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கண்ணிவெடியை தற்போது இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்துள்ளனர். காலையில் ரோந்து சென்று கொண்டிருந்த வீரர்கள் சாலை அருகே இந்த கார் தனித்து நிற்பதை கண்டறிந்துள்ளனர்.சோதனைக்கு பிறகு கண்ணிவெடி கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாபெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் எதிரி அல்ல-திடீர் பல்டி அடித்த சீனத் தூதர்

May 28, 2020

இந்திய சீன தொடர்பான பிரச்சனை நடந்து வரும் வேளையில் சீனத்தூதர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.எல்லைப் பிரச்சனையில் இந்தியாவை சீனாவும் சீன மீடியாவும் பலமாக சீண்டிய பிறகு தற்போது சீனப்பேச்சின் திசை மாறியுள்ளதாக தெரிகிறது. புதுடெல்லியில் பேசிய சீனத் தூதர் சன் வெய்டோங் இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கு ஒருவர் பிரச்சனையாக இருக்க முடியாது எனவும் இந்த வேறுபாடுகள் இரு நாட்டு உறவுகளை பாதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார். இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த இரு நாடும் ஒருவர் மீது […]

Read More

இந்தியாவின் கோபத்திற்கு கடுமையான பதிலடி கிடைக்கும்: பாக் வெளியுறவு அமைச்சர் பேச்சு

May 28, 2020

இந்தியாவின் முரட்டுத் தனமான கோபத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தனது நாட்டு மக்களும் இராணுவ படையும் அதற்கு தயாராக இருப்பதாக பாக் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். ரேடியோ பாகிஸ்தானில் பேசிய அவர் இந்தியா பாகிஸ்தானை விரோதமாக எண்ணுகிறது.இதனால் பாகிஸ்தானை அச்சமூட்ட நினைக்கிறது.நாங்க கடந்த காலத்தில் பொறுமையாக இருந்தோம்.இனி வரும் காலங்களிலும் பொறுமையாகவே இருப்போம் என அவர் பேசியுள்ளார். ஆனால் தன்னை பாதுகாத்து கொள்ள பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாவும் அவர் பேசியுள்ளார். […]

Read More