Day: May 27, 2020

அமெரிக்க படைகளுக்காக பெறப்பட்ட புதிய ரோமியோ வானூர்திகளை அவசரமாக இந்தியாவிற்கு வழங்கும் அமெரிக்கா

May 27, 2020

அமெரிக்க கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட புதிய MH-60R Sea Hawk வானூர்திகளை இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்திருந்த ட்ரம்ப் அவர்கள் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி முதல் ஆறு வானூர்திகள் அடுத்த வருடம் தான் இந்தியாவிற்கு வழங்கப்படும் என சிக்கோர்ஸ்கி நிறுவனம் கூறியிருந்த நிலையில் தற்போது அமெரிக்க படைக்காக தயாரித்து வைத்திருந்த மூன்று வானூர்திகள் இந்தியாவிற்கு இந்த வருட இறுதிக்குள் அந்நிறுவனம் வழங்க உள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் […]

Read More

இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய மேப் வெளியிட இருந்த நேபாளம் பின்வாங்கியது ஏன் ?

May 27, 2020

புதிய மேப்பை சட்டமாக்க இன்று நேபாளம் முடிவெடுத்திருந்த வேளையில் அதிலிருந்து இன்று பின்வாங்கியுள்ளது. நேபாளம் சில நாட்களுக்கு முன் இந்தியப் பகுதிகளை இணைத்து புதிய மேப் வெளியிட்டு அதை சட்டமாக்க உள்ளதாக அறிவித்திருந்தது. நேபாள மன்றத்தில் இருந்து இந்த புதிய மேப் விவகாரம் தொடர்பான நிகழ்வு விலக்கப்பட்டதற்கு எந்தவிதமான காரணமும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேபாள காங்கிரஸின் கிரிஷ்ன பிரசாத் தெரிவித்துள்ளார். ‘Constitution of Nepal Second Amendment Bill 2077’ என்பதை […]

Read More

லடாக்கில் இந்திய படைபலம் குறித்த கட்டுரை; இதன் காரணமாக தான் சீனா பதறுகிறது கண்டிப்பாக படிக்கவும் !!

May 27, 2020

லடாக் பகுதி முழுமைக்கும் இந்திய தரைப்படையின் 14ஆவது கோர் பொறுப்பாகும். இதன் கீழ் 3ஆவது காலாட்படை டிவிஷன் லடாக்கில் சீன எல்லைக்கு பொறுப்பு. 8ஆவது மலையக போர்ப்பிரிவு டிவிஷன்; த்ராஸ் கார்கில் பட்டாலிக் ஆகிய பாக் எல்லையோர பகுதிகளுக்கு பொறுப்பு. சியாச்சின் ப்ரிகேட் இது எந்த டிவிஷன் கீழும் வராமல் நேரடியாக 14ஆவது கோர் கீழ் இயங்கும். ஒரு கவச ப்ரிகேட் மற்றும் ஒரு ரிசர்வ் ப்ரிகேட் இரண்டுமே நேரடியாக 14ஆவது கோர் கீழ் இயங்கும். லடாக்கில் […]

Read More

தேவைப்பட்டால் எங்கள் இராணுவமும் போரிடும்: இந்தியாவிற்கு நேபாளம் எச்சரிக்கை

May 27, 2020

இந்தியாவிற்காக போராடி உயிர்துறந்த கூர்கா வீரர்களின் தியாகத்தை இந்திய இராணுவ தளபதி கொச்சை படுத்தியுள்ளதாக நேபாள இராணுவ அமைச்சர் ஈஸ்வர் பொக்ரெல் கூறியுள்ளார். லிபுலேக் என்னுமிடத்தில் சாலை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியாவை கடுமையாக எதிர்த்து வருகிறது நேபாளம்.இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா லிபுலேக்கில் இந்திய எல்லைக்குள்ளாக தான் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியது. இதற்கு பதிலடியாக நேபாளமும் லிபுலேக்,கலபனி மற்றும் லிம்பியாடுரா ஆகிய பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய இராணுவ தளபதி […]

Read More

சீனாவுக்கு அடுத்த சிக்கல் திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகள் அமெரிக்காவால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படுமா ??

May 27, 2020

சுதந்திர நாடாக இருந்த திபெத்தை சீனா படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம், தற்போது ஹாங்காங் மற்றும் தைவானை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா காத்துக்கொண்டு இருக்கிறது. தற்போது இதில் ஒரு புதிய சிக்கல் உருவாகி உள்ளது .அதாவது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பிரதிநிதி ஸ்காட் பெர்ரி அமெரிக்கா அதிபர் திபெத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் வகையிலான ஒரு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். இவர் ஏற்கனவே ஹாங்காங் விஷயத்திலும் இதைப்போன்ற […]

Read More

அசால்டாக சீனாவை கடுப்பேற்றும் இந்தியா !!

May 27, 2020

சீனா இந்தியாவை எளிதில் அடக்கிவிடலாம் என தப்பு கணக்கு போட்டிருந்தது ஆனால் தற்போது சீனாவின் எதிர்ப்புகளை உதாசீனம் செய்துவிட்டு வழக்கம் போல எல்லையோரம் தனது பணிகளை தொடர்ந்து வருகிறது. லடாக்கில் தார்புக் – ஷியோக் – தவ்லத் பெக் ஒல்டி வரை செல்லும் 285கிமீ நீளம் கொண்ட சாலையை இந்தியா சமீபத்தில் கட்டி முடித்தது. இதன்மூலம் இந்தியா எல்லை பகுதிகளுக்கு மிக விரைவாக தளவாடங்கள் மற்றும் வீரர்களை நகர்த்த முடியும். இந்த சாலை எல்.ஏ.சி க்கு நேராக […]

Read More

மீண்டும் ஆறு மாதங்கள் தள்ளிப்போகும் விக்ராந்த் டெலிவரி! கட்டுமானத்திலேயே காலத்தை கழித்து விடும் அபாயம் !!

May 27, 2020

இந்திய கடற்படைக்காக கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் மிக நீண்ட காலமாக ஐ.என. எஸ் விக்ராந்த் எனும் விமானந்தாங்கி கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இந்த கப்பலின் கட்டுமானம் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது, கடந்த 2009ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கிய இக்கப்பல் சுமார் 9ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்ப்பட்டது இதுவே மிக நீண்ட காலமாகும். இதன் பின்னர் திரும்பவும் நீட்டிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடர்ந்த நிலையில் கப்பலின் முக்கிய கருவிகள் திருடப்பட்டன. […]

Read More

காரகோரம் கணவாய் அருகே சீனாவிற்கு எதிரான படைக்குவிப்பில் இந்தியா-கட்டுமானங்களை தொடர உத்தரவு

May 27, 2020

லடாக்கில் சீன அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து தங்களது பணியை இந்திய இராணுவம் மேற்கொண்டு வருகிறது.காரகோரம் கணவாய்க்கு தெற்கே உள்ள கடைசி இராணுவ நிலையானதௌலத் பெக் ஓல்டி எனும் பகுதியை ஒட்டி கட்டப்பட்டு வரும் பாலம் தொடர்பான பணிகளை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த பகுதியில் உள்ள சீன பலத்திற்கு நிகராக இந்திய இராணுவமும் தனது பலத்தை அதிகப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு குழு பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எக்காரணம் கொண்டும் எல்லைக் கோடு […]

Read More

மீண்டும் அதே தவறு இழைக்கப்படுமா ??

May 27, 2020

இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த விமானங்களில் மிராஜ்2000 தவிர்க்க முடியாத இடத்தை பெறுகிறது. கடந்த 1985ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முதலாவது மிராஜ்2000 இணைந்தது. ஆரம்பகட்டமாக 36 மிராஜ்2000 விமானங்கள் வாங்கப்பட்டன தற்போது இந்திய விமானப்படையில் 41 மிராஜ்2000 விமானங்கள் உள்ளன. பலமுறை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த பட்டு சுமார் 35வருட காலமாக நாட்டின் சேவையில் உள்ளது. கார்கில் போர், பாலகோட் தாக்குதல் என அசத்தி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விமானத்தை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்ய […]

Read More

தைவான் மற்றும் ஹாங்காங்கை ஒட்டிப் பறந்த அமெரிக்க குண்டுவீசு விமானங்கள்- உட்சகட்ட பதற்றம்

May 27, 2020

அமெரிக்க விமானப்படையின் இரு பி-1பி குண்டுவீசு விமானங்கள் மற்றும் ஒரு வானிலேயே எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் தைவானுக்கு தெற்கிலும் ஹாங்கிங்கிற்கு மிக அருகிலும் பறந்து சென்றுள்ளன. ஹாங்காங்கிற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிவித்த பின்பும், தைவனுக்கு அருகே போர்விமானங்களையும் கடற்படை கப்பல்களையும் சீனா அனுப்பிய பிறகு அமெரிக்காவின் இந்த செயல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு குண்டுவீசு விமானங்கள் மற்றும் ஒரு KC-135R டேங்கர் விமானங்கள் குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து பறந்து […]

Read More