Breaking News

Day: May 24, 2020

காஷ்மீரில் 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது !!

May 24, 2020

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின்படி 4 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்களாவன;1)பிர்வாஹ்2)ஃபருக் அஹமது3)மொஹம்மது யாசின்4)அசாருதீன் மீர் இவர்கள் நால்வரும் பட்காம் பகுதியில் உள்ள வசிம்கானி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை தரைப்படையின் 53ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் பட்காம் காவல்துறையால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

Read More

புதிய அத்தியாயம்; லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்த அமெரிக்க கடற்படை !!

May 24, 2020

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பஸிஃபிக் பெருங்கடலில் ஏதோ ஒரு இடத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக மே16ஆம் தேதி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ்ஸ.எஸ் போர்ட்லான்ட எனும் நிலநீர் தாக்குதல் கப்பலில் பொருத்தப்பட்ட லேசர் கருவி ஒரு ஆளில்லா விமானத்தை தாக்கி வீழ்த்தி உள்ளது. இந்த லேசர் கருவி 150கிலோவாட் திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து யு.எஸ்.எஸ். போர்ட்லான்ட கப்பலின் தலைமை கட்டளை அதிகாரி கேப்டன். கேர்ரி ஸான்டர்ஸ் கூறுகையில், இந்த ஆயுதம் […]

Read More

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் புதிய லடாக் காவல்துறை உருவாக்கம் !!

May 24, 2020

கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீர் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி அமல்படுத்தி வந்த நிலையில் காவல்துறை மட்டும் பழைய ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் காவல்துறையாக இயங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது லடாக் மாநிலத்திற்கு தனியாக புதிய காவல்துறை தோற்றுவிக்கப்பட்டு புதிய சின்னம் கொடி […]

Read More

எல்லையில் நான்கு இடங்களை குறிவைக்கும் சீனா ; நிரந்தரமாக கைப்பற்ற நினைக்கிறதா ?

May 24, 2020

இந்திய-திபத் (சீனா) எல்லை 3488கிமீ அளவுக்கு விரிந்து பரந்திருந்தாலும் சீனா நான்கு இடங்களை மட்டுமே அதிகமாக குறிவைத்து ஊடுருவல் நடத்தியுள்ளது.2015 முதல் நடைபெற்ற 80% சம்பவங்களில் நான்கு இடங்களில் தான் அதிகமாக ஊடுருவல்கள் நடந்துள்ளன.அவற்றுள் மூன்று கிழக்கு லடாக் பகுதியில் உள்ளன. பங்கோங் ஏரி ( தற்போது மோதல் நடக்கும் இடம், ட்ரிக் மற்றும் பர்ட்சி ஆகிய இடங்களில் அதிகமான ஊடுருவல் நடைபெற்றுள்ளது. 2019ல் இருந்தே சீன ஊடுருவல்கள் அதிகரித்தே வந்துள்ளன.டோலெடாங்கோ எனும் பகுதியில் 2019ல் மட்டுமே […]

Read More

லடாக் தலைநகர் லேவுக்கு தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே திடீர் விசிட், எதற்கும் தயாராக இருக்கும்படி வீரர்களுக்கு அறிவுரை !!

May 24, 2020

லடாக்கில் இந்திய சீன எல்லையோரம் மிக பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று திடிரென இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே லடாக்கின் லேயில் உள்ள 14ஆவது கோர் பிரிவின் தலைமையகத்திற்கு தீடிரென விசிட் அடித்தார். அங்கு உயரதிகாரிகளிடம் தயார்நிலை பற்றி கேட்டறிந்து ஆய்வு செய்த அவர் அதிகாரிகள் மற்றும் வீரர்களிடம் எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார். கடந்த சில வாரங்களாக இந்திய படைகள் மற்றும் சீன […]

Read More