20வருடங்களில் 2 கட்டளை அதிகாரிகளை இழந்த தரைப்படையின் 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் !!

  • Tamil Defense
  • May 5, 2020
  • Comments Off on 20வருடங்களில் 2 கட்டளை அதிகாரிகளை இழந்த தரைப்படையின் 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் !!

முன்தினம் ஹன்ட்வாரா பகுதியில் நடைபெற்ற சண்டையில் பொதுமக்களை மீட்கும் போது 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸின் கட்டளை அதிகாரி, 1 மேஜர் மற்றும் 2 ஜவான்கள் வீரமரணமைடந்தனர்.

கர்னல் அஷூதோஷ் ஷர்மா (40வயது) 20வருடங்கள் நாட்டிற்கு சேவை செய்துள்ளார். அவரது சீனியர் மற்றும் ஜூனியர் அதிகாரிகள் அவர் மிகுந்த உற்சாகம் கொண்டவர் எனவும் தனது வீரர்களுடன் நேரம் செலவிட விரும்புவர் எனவும் தெரிவித்தனர். மேலும் ராணுவத்தில் அதிகாரியாக இணைய முயற்சி செய்து 13ஆவது முறை வெற்றி பெற்றவர் ஆவார். இவர் சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000 ஆண்டில் இதே படையணியின் கட்டளை அதிகாரியான கர்னல் ராஜிந்தர் சவுஹான் பிரிகேடியர் பி.எஸ். ஷெர்கில் உடன் மேற்பார்வையிட சென்ற போது பயங்கரவாதிகள் அவர்களது வாகனத்தை குண்டு வைத்து தகர்த்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கர்னல் அஷூதோஷ் ஷர்மா மற்றும் கர்னல் ராஜிந்தர் சவுஹான் ஆகிய இருவரும் குப்வாரா மாவட்டத்தின் ஹன்ட்வாரா பகுதியில் தான் வீரமரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணி தரைப்படையின் பிரிகேட் ஆஃப் கார்ட்ஸ் ரெஜிமென்ட்டை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களை கொண்ட படையணியாகும்.

இந்த படையணி “ட்ரிபிள்
செஞ்சூரியன்ஸ்” என அழைக்கப்படுகிறது காரணம் இந்த படையணி மட்டுமே 30 வருடங்களில் சுமார் 300 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.