Day: May 21, 2020

இந்திய உதிரி பாகங்களை வைத்து சரிசெய்ய படும் ஃபிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல் !!

May 21, 2020

ஃபிலப்பைன்ஸ் கடற்படை கப்பல் பி.ஆர்.பி. ரமோன் அல்காரெஸ் மே7 ஆம் தேதி என்ஜினில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த காரணத்தால் கொச்சி துறைமுகத்திற்கு சரி செய்யும் பணிக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து ஃபிலப்பைன்ஸ் கடற்படை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கமாண்டர் மரியா க்ரிஸ்டினா ரோக்ஸாஸ் கூறுகையில் இந்திய உதிரி பாகங்கள் கொண்டு கப்பல் சரி செய்யப்பட்டு வருவதாகவும், மே27 ஆம் தேதி கப்பலின் சரிபார்ப்பு பணிகள் முடிவடையும் என கூறினார். ஃபிலப்பைன்ஸ் கடற்படையின் 82ஆவது நடவடிக்கை குழு […]

Read More

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு !!

May 21, 2020

அமெரிக்கா கடந்த புதன்கிழமை அன்று இந்தியாவுக்கு சீனாவுடனான எல்லை பிரச்சினையில் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசின் தெற்காசிய பிராந்தியத்திற்கின பிரதிநிதி ஆலிஸ் வெல்ஸ் பேசும்போது அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியான் நாடுகள் ஆகியவை சீனாவின் முரட்டுத்தனம் மற்றும் தொந்தரவால் ஓரணியில் திரள்வதாக கூறினார். மேலும் சமீபத்திய இந்திய சீன எல்லையோர பதட்டங்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” சீனாவின் முரட்டுதனமான நடவடிக்கைகள் புதிதல்ல, தென்சீன கடல் பகுதியாகட்டும் அல்லது இந்திய எல்லையாகட்டும் […]

Read More

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை கைது செய்த பாதுகாப்பு படையினர் !!

May 21, 2020

காஷ்மீரின் சோகாம் பகுதியில் புதிதாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மூன்று இளைஞர்களை கூட்டு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவரின் பெயர்கள் தெரிய வந்துள்ளது,ஸாகீர் அஹமது பட் மற்றும் அபீத் ஹூசைன் வானி ஆகியோர் ஆவர்.இவர்களிடம் மேலதிக தகவல்களுக்காக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அவந்திபோரா பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்து தகவலின் பேரில் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் […]

Read More

ககுடா நடவடிக்கை-பாக்கின் அணுஆயுத ஆசையை தகர்க்க ரா நடத்திய ஆபரேசன்

May 21, 2020

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவிடம் ஒரு நல்ல உளவுத்துறை இருந்தது.அதன் பெயர் தான் இன்டலிஜன்ஸ் பீராே அதாவது ஐபி எனக் கூறுவர்.ஆனால் ஒரு காலத்திற்கு பிறகு பாகிஸ்தான் சீக்கிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்து சில கேடுகெட்ட வேலைகள் செய்ததால் ஐபியால் சரியாக செயல்படமுடியாமல் போயிற்று. இந்த நடவடிக்கை இடைவெளியை குறைக்க அப்போதைய பிரதமர் இந்திரா அவர்கள் இந்தியாவுக்கென்றே தனியாக வெளி விவகாரங்களை கவனிக்கிற உளவுத் துறை வேண்டும் என்பதை அறிந்து 1968ல் இராமேஸ்வர் நாத் […]

Read More

மெட்ராஸ் சாப்பர்ஸ்-மெட்ராஸ் என்ஜினெர் குரூப்

May 21, 2020

MADRAS ENGINEER GROUP (MEG), மெட்ராஸ் சாப்பர்ஸ் என்று அழைக்கப்படும் பிரிவு இந்திய இராணுவத்தின்  பொறியியலாளர் குழுவாகும். பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாகாண இராணுவத்தில் இருந்து சென்னை சாப்பர்ஸ் தோற்றத்தை வரையறுக்கிறது. இந்த படைப்பிரிவு பெங்களூரை தனது தலைமையிடமாகக் கொண்டுள்ளது. சென்னை சாப்பர்ஸ் கார்ப்ஸ் , பொறியாளர்களின் மூன்று குழுக்களில் மிகவும் பழமையானது. 1862 க்கும் 1928 க்கும் இடையில் நடைபெற்ற விரிவான மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து மட்ராஸ் சாப்பர்ஸ் மட்டுமே சென்னை மாகாண இராணுவத்தின் ஒரே படையாக […]

Read More

லடாக் ஏரியில் அதிக கப்பல்களை அனுப்பும் சீனா , இந்தியாவும் படைக்குவிப்பு

May 21, 2020

பங்கோங் ஏரியில் இரு முறை கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இன்றும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சீனா தொடர்ந்து வீரர்களை அனுப்பி வருகிறது. இந்தோ திபத் எல்லையில் உள்ள பைஜிங் மற்றும் லிஜின் டுவான் பகுதிக்குள் இந்திய வீரர்கள் நுழைந்து சீன ரோந்தை தடுப்பதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக இராணுவம் மற்றும் வெளியுறவுச் செயலகம் இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியப் பகுதிக்குள் பாலம் […]

Read More

எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய பயங்கரவாதிகள்-இரு வீரர்கள் வீரமரணம்

May 21, 2020

ஸ்ரீநகரில் ரோந்து சென்ற எல்லைக் காவல் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டத்தின் பன்டஹ் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வீரர்கள் 37வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர். கான்ஸ்டபிள் ஜியாவுல் ஹக் மற்றும் கான்ஸ்டபிள் ரானா மோன்டோல் ஆகிய இரு வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர். டியூட்டியில் இருந்த இரு வீரர்கள் கடையில் பொருள்கள் வாங்க சென்ற போது பைக்கில் வந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை […]

Read More