ஸ்ரீநகரில் ரோந்து சென்ற எல்லைக் காவல் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டத்தின் பன்டஹ் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வீரர்கள் 37வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர். டியூட்டியில் இருந்த இரு வீரர்கள் கடையில் பொருள்கள் வாங்க சென்ற போது பைக்கில் வந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.ஒரு வீரர் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தார்.மற்றொரு வீரர் மருத்துவமனையில் வீரமரணம் அடைந்தார்.அவர்களது ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் […]
Read Moreசீன எல்லைக்குள் நுழைந்து சீன வீரர்களின் ரோந்தை இந்திய வீரர்கள் தடுப்பதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. டோகாலாம் பிரச்சனைக்கு பிறகு தற்போது நடக்கும் பிரச்சனை தீவிரமாகி வருகிறது. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி சிக்கிம் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி சீன எல்லைக்குள் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா உடனடியாக தனது வீரர்களை திரும்ப பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது.இதற்கு நமது பக்கம் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது மோதல் நீடித்து […]
Read Moreபாகிஸ்தான் கடற்படை நீண்ட காலமாக புதிய தளவாடங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டு இருந்தது. தற்போது பல்வேறு ஒப்பந்தங்களை பாக் கடற்படை மேற்கொண்டுள்ளது.அந்த பட்டியலை கீழே காணலாம். 1) துருக்கியின் ப்ராஜெக்ட் மில்கெம் (4 அடா ரக ஸ்டெல்த் கார்வெட் கப்பல்கள்) 2) 4 – ஜிங்காய் 2 ரக சீன கார்வெட் கப்பல்கள் 3) 8 ஹங்கோர் ரக நீர்மூழ்கிகள் சீனாவிடம் இருந்து, 4) சீன உதவியுடன் பாகிஸ்தான் கடற்படைக்கு ஒரு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி. குறைந்த […]
Read Moreகொரோனா தொற்று காரணமாக அமெரிக்க சீன உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் சீனாவின் மீதான அதிருப்தியில் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று சீன பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பாதுகாப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கலாம் என பரவலான எதிர்பார்ப்பு உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா கடந்த வருடம் 7.5% அளவுக்கு தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்தது, அதாவது 167 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்தது. […]
Read Moreகடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இந்தியா வெளிநாட்டு போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த நிலையில் இந்திய விமானப்படை தளபதி உள்நாட்டு தேஜாஸ் விமானங்களும், 114 நடுத்தர பல்திறன் போர் விமானங்களும் இன்றியமையாதவை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கென மட்டுமே தயாரித்து தருவதாக அறிவித்த எஃப்21 போர் விமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த விமானம் […]
Read Moreஅமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எஃப்35 ஏ விமானம் ஒன்று ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள எக்லின் படைதளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்டது. பயிற்சி முடிந்த நிலையில் தரையிறங்கும் போது விமானம் விபத்தை சந்தித்து உள்ளது. அதிர்ஷடவசமாக விமானி உயிர் பிழைத்த நிலையில் 96ஆவது மருத்துவ குழு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தான் இதே படைதளத்தில் எஃப்22 ராப்டர் விமானம் விபத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் இரண்டு விலை உயர்ந்த அதிநவீன […]
Read Moreலடாக் மற்றும் சிக்கீமில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற மோதலுக்கு பிறகு எல்லாம் அமைதியான நிலையில் தற்போது சீனா இந்த இரு பகுதிகளில் முரட்டுதனமாக நடந்து கொள்கிறது. கிழக்கு லடாக்கில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருகின்றன, பாங்காங் ஸோ ஏரி, தெம்சாக், தவ்லத் பெக் ஒல்டி, கல்வான் ஆறு போன்ற பகுதிகளில் இரு நாடுகளின் வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர். இதில் கல்வான் ஆற்றுப்படுகை கடந்த 60 ஆண்டுகளாக மோதல்களுக்கு வித்திட்டுள்ளது. 1962போரில் கூட இப்பகுதியை சீனா […]
Read Moreஇந்திய விமானப்படை நீண்ட காலமாக 8,000 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது சுதேசி தளவாடங்களுக்கு ஆதரவாக அவற்றை கிடப்பில் போட்டுள்ளது. சமீபத்தில் எ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா ” 38 பிலாட்டஸ் அடிப்படை பயிற்சி விமானங்களை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்தும், இங்கிலாந்திடம் இருந்து 20 ஹாக் ஜெட் பயிற்சி விமானங்களை வாங்கவும், 200 ஜாகுவார் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் […]
Read More1965 போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த போரை 3வது பட்டாலியன் ஜாட் வீரர்கள் நடத்தினர். அப்போது இந்தியப் படைகள் லாகூருக்கு அருகே போரிட்டு கொண்டிருந்தனர்.லாகூரை கைப்பற்ற வேண்டி படைகள் நகர்ந்தனர்.லாகூர் (பாகிஸ்தான்) முன் ஒரு கிமீ தொலைவில் இருந்தது தான் இந்த டோக்ராய் கிராமம். 6 செப்டம்பரில் இந்தியப் படைகள் டோக்ராயை கைப்பற்றினாலும் உதவிக்கு மேலதிக இந்தியப் படைகள் வர தாமதமானதால் டோக்ராயை விட்டு இந்தியப் படைகள் பின்வாங்க வேண்டியதாயிற்று.பாக் படைகள் டோக்ராயில் வலிமையான காலூன்றியிருந்தன.காரணம் […]
Read More