Day: May 16, 2020

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்- காவல்துறை வீரர் வீரமரணம்

May 16, 2020

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்பு படைகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு காவல்துறை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். காஷ்மீரின் குல்கமில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.காஷ்மீர் காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்த ரோந்து குழு மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரிசல் எனும் பகுதியில் நடந்த தாக்குதலில் காஷ்மீர் காவல்துறை வீரர் தலைமை காவலர் முகமது அமின் உட்சபட்ச தியாகம் செய்துள்ளார். வீரவணக்கம்

Read More

பாக்கிற்கு அடுத்த ஆப்பு;கடலில் தேவை இல்லை என்றால் விமானங்களை பாலைவன பகுதிக்கு மாற்றுவோம்-முப்படை தளபதி ராவத்

May 16, 2020

தியேட்டர் கமாண்ட் என்பது பெரும்பாலும் விமானப்படை மற்றும் இராணுவத்தின் பகுதிகள் இணைந்ததாக மட்டுமே உள்ளது.வடக்குசார் எல்லை என்று வரும் போது அங்கு கடற்படையின் தொகுதியும் இருத்தல் வேண்டும் என ஒருங்கிணைந்த படைத்தளபதி ராவத் அவர்கள் கூறியுள்ளார்.ஏற்கனவே 2017ல் கடற்படையின் பி-8ஐ தொலைதூர கடல்சார் கண்காணிப்பு விமானங்கள் சீன இராணுவ நகர்வை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். படைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்குள் பிணைப்னை ஏற்படுத்தவும் அதன் மூலம் சிறிய சக்திமிக்க படையை உருவாக்க வேண்டும் எனவும் தற்போது அதற்கான பணிகள் […]

Read More

மலை குகைக்குள் மாற்றப்படும் சுவீடன் கடற்படை தலைமையகம் !!

May 16, 2020

சுவீடன் நாட்டு கடற்படையின் தலைமையகம் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 40கிமீ தொலைவில் கடலை ஒட்டி அமைந்துள்ள மலை ஒன்றில் குடையப்பட்ட குகைகளுக்குள் மாற்றப்பட உள்ளது. இதனை முஷ்கோ படைத்தளம் என அழைக்கிறார்கள். கடந்த 1969ஆம் ஆண்டு அணு ஆயுத தாக்குதலையும் தாங்கும் வகையில் கட்டி முடக்கப்பட்ட இந்த தளம் பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் ராணுவ வலிமை காரணமாக சுவீடனுக்கு இன்றியமையாத தளமாக இருந்தது. இந்த தளத்தில் பல கப்பல்களை நிறுத்தும் அளவிற்கு இடவசதி ஏற்படுத்தும் வகையில் […]

Read More

விசாகப்பட்டினம் கடற்படை தள சதி முக்கிய குற்றவாளி கைது !!

May 16, 2020

சில மாதங்களுக்கு முன்னர் சில தேச துரோக எண்ணம் கொண்ட கடற்படை வீரர்கள் கடற்படை ரகசியங்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த சதித்திட்டத்தில் தலையாய பங்கு வகித்த மொஹம்மது ஹாருண் ஹஜி அப்துல் ரெஹ்மான் லக்டாவாலா என்பவனை மும்பையில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “இவன் பலமுறை பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு வர்த்தகம் தொடர்பாக செல்வதாக கூறிவிட்டு அங்கு அலி […]

Read More

சீனாவுக்கு எதிராக கைகோர்க்கும் உலக நாடுகள் – அவை எடுக்கும் 5 நடவடிக்கைகள் !!

May 16, 2020

பல உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக அணிதிரண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில் ஐந்து வகையான நடவடிக்கைகள் உள்ளடங்கி உள்ளன. 1) கொரோனா நீதி விசாரணை: பல நாடுகள் கொரோனாவின் தோற்றம் குறித்த நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. ஆஸ்திரேலியா முதலாவது நாடாக கோரிக்கை வைத்தது, இதனை நியூசிலாந்து அரசும் வழிமொழிந்து உள்ளது. அமெரிக்கா தனது சார்பாக சில விசாரணை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் பிரிவின் தலைவரும் […]

Read More

சீன, பாகிஸ்தான் எல்லையோரம் பதற்றம் நிலவும் நேரம் இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் !!

May 16, 2020

தற்போது இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது, ஆனால் விரைவில் இந்தியாவின் பலத்தை அதிகரிக்க ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக சிறிது காலதாமதம் ஆகியிருக்கும் நிலையில் தற்போது ஜூலை மாதம் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில் இந்தியா வந்து சேரும் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா அப்போது அளித்த […]

Read More

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி கைது

May 16, 2020

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். காஷ்மீரின் பத்கமில் உள்ள அரிஸால் கிராமத்தில் ரோந்து சென்ற காஷ்மீர் காவல்துறை,இராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படை வீரர்களால் இந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளனான். பயங்கரவாதிகளுக்கான மறைவிடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Read More

சீனா நெருக்குதலில் இந்தியாவை எதிர்க்கும் நேபாளம்-இராணுவ தளபதி மறைமுக குற்றச்சாட்டு

May 16, 2020

உத்ரகண்டில் புதிதாக அமைத்துள்ள லிபுலேக்-தார்ச்சுலா சாலையை யாருடைய தூண்டுதலின் பேரிலேயோ நேபாளம் எதிர்க்கிறது என இந்திய இராணுவ தளபதி குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவை மறைமுகமாக சுட்டியே இந்த குற்றச்சாட்டை தளபதி பதிவு செய்துள்ளார். அந்த பகுதியில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இதுவரை பிரச்சனை நடந்ததில்லை எனவும் சாலை இந்திய எல்லைக்குள்ளாகவே தான் அமைக்கப்பட்டுள்ளது என தளபதி கூறியுள்ளார். காலி ஆற்றுக்கு கிழக்கு பக்கம் உள்ள பகுதி நேபாளத்திற்கே சொந்தம் என நேபாள் தூதர் கூறியுள்ளார்.அதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் சாலை […]

Read More

!சூப்பர் டூப்பர் ஏவுகணை” செயல்பாட்டில் உள்ளதை விட 17 மடங்கு வேகம் கொண்டது- அதிபர் ட்ரம்ப்

May 16, 2020

அமெரிக்க அதிபர் டோனால்டு அவர்கள் வெள்ளியன்று செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்கா சூப்பர் டூப்பர் ஏவுகணை ஒன்றை மேம்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.தற்போது உலகில் செயல்பாட்டில் உள்ளதை விட 17 மடங்கு வேகத்தில் இந்த ஏவுகணை செல்லும் என அவர் கூறியுள்ளார். இந்த ஏவுகணை தற்போது இரஷ்யா மற்றும் சீனா மேம்படுத்தி வைத்துள்ள அனைத்து ஏவுகணைகளை விடவும் நவீனமானது என அவர் கூறியுள்ளாா். அமெரிக்காவின் ஸ்பேஸ் போர்ஸ் படைப்பிரிவிற்கான புதிய கொடியை ட்ரம்ப் வெளியிட்ட போது இந்த தகவலை […]

Read More

அமெரிக்காவின் 5ம் தலைமுறை விமானமான எப்-22 ரேப்டார் விமானம் விபத்து

May 16, 2020

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எக்லின் விமானப்படை தளத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.விமானி பத்திரமாக வெளியேறி தற்போது நல்லபடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தினசரி பயிற்சி பணியில் இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள மணிப்படி காலை 11.30க்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எப்-22 ரேப்டார் தான் தற்போது உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை விமானமாக உள்ளது.

Read More