Day: May 15, 2020

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குக்ரி மற்றும் அதன் கேப்டன் மகேந்திர நாத் முல்லா அவர்கள் பற்றிய சிலிர்ப்பூட்டும் கதை

May 15, 2020

ஐஎன்எஸ் குக்ரியின் சிலிர்ப்பூட்டும் கதை டிசம்பர் 9, 1971 அன்று பாகிஸ்தான் நீர்மூழ்கி பிஎன்எஸ் ஹங்கோர் இந்திய கடற்படையின் குக்ரி போர்க்கப்பல் மீது இரு டோர்பிடோக்களை ஏவியது.இரு டோர்பிடோக்களும் குக்ரியை தாக்க , கப்பலை இனி காப்பாற்ற முடியாது என கேப்டனுக்கு புரிந்தது.அவர் தனது வீரர்களுக்கு கப்பலை கைவிட உத்தரவிட ஆறு அதிகாரிகள் மற்றும் 61 வீரர்கள் உயிர்பிழைக்க 18 அதிகாரிகள் மற்றும் 178 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கமோடோர் எஸ்என் சிங் இந்த துர் சம்பவத்தை […]

Read More

இந்தியாவின் ஒரே குதிரைப்படை ரெஜிமென்ட்டும் கடைசியில் டாங்கிகளை பெற உள்ளது – வருத்தமும் மகிழ்ச்சியும் !!

May 15, 2020

இந்திய தரைப்படையின் ஒரே குதிரைப்படை ரெஜிமென்ட்டான 61ஆவது குதிரைப்படை விரைவில் தனது சிறப்பு அந்தஸ்தை களைந்து இயந்திரமயமாக்கப்பட உள்ளது. உலகில் கடைசியாக இருக்கும் ஒரு சில குதிரைப்படை அணிகளில் இந்த ரெஜிமென்ட்டும் ஒன்றும் அவற்றில் இது மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தரைப்படை வட்டார தகவல்கள் இந்த முடிவு லெஃப்டினன்ட் ஜெனரல் ஷெகட்கர் கமிட்டி ராணுவத்தின் சண்டை பலத்தையும் பொருளாதார சிக்கனத்தையும் அதிகரிக்க பரிந்துரைத்த அறிக்கையின்படி செயல்படுத்தப்படுவதாகவும், ஏற்கனவே தரைப்படையில் தன்னிச்சையாக இயங்கி வரும் மூன்று டாங்கி ஸ்க்வாட்ரன்களை […]

Read More

நீர்-நில தாக்கும் சக்தியை பெருக்கும் கடற்படை-புதிய LCU L57 போர்க்கப்பல் படையில் சேர்ப்பு

May 15, 2020

லேன்டிங் கிராப்ட் யுடிலிடி மார்க் 4 வகை கப்பலான எல்சியு எல்57 என்ற புதிய கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளத. மே 15 2020ல் படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பலை போர்ட் பிளேரில் நடைபெற்ற விழாவில் லெப்டினன்ட் ஜெனரல் பிஎஸ் ராஜேஸ்வர் அவர்கள் படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்தார். இந்தியா சொந்தமாக கப்பல் வடிவமைத்து கட்டி படையில் இணைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இந்த ரக கப்பல்கள் உள்ளன.இது வரை ஏழு கப்பல்கள் கட்டப்பட்டு படையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன. டேங்குகள்,கவச […]

Read More

பன்மடங்கு அதிகரிக்க போகும் ஜப்பானிய ராணுவ பலம்; அடாவடி சீனாவுக்கு செக் !!

May 15, 2020

பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஜப்பானில் ராணுவம் என்பது குறைந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட காவல்துறையை போன்றே இருந்து வந்தது, பின்னர் மெதுவாக ராணுவம் கட்டமைக்கப்பட்டது எனினும் தற்காப்பு தான் குறிக்கோளாக இருந்தது. 2000ஆவது ஆண்டிற்கு பின்னர் இந்த நிலை மாற தொடங்கியது, ஜப்பானிய கடற்படை விமானப்படை போன்றவை பல்வேறு அதிநவீன தளவாடங்களை படையில் சேர்க்க துவங்கின. சிறிது தாமதம் ஆனாலும் ஜப்பானிய தரைப்படையும் தனது பங்குக்கு அதிநவீன தளவாடங்களை சேர்க்க தொடங்கியது. இந்த போக்கு […]

Read More

ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபடும் சீனா !!

May 15, 2020

இந்திய எல்லையில் மட்டும் சீனா அத்துமீறல் செய்யவில்லை பல்வேறு நாடுகளுடன் சீனா எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுடன் சிக்கீம் மற்றும் லடாக்கில் மோதல்,மலேசியாவுடன் தென் சீன கடலில் மோதல், வியட்நாமுடன் தென் சீன கடலில் மோதல் சமீபத்தில் ஒரு வியட்நாமிய மீன்பிடி படகை சீன கடலோர காவல்படை முழ்கடித்தது, தைவானுடன் மோதல், இந்தோனிசியாவுடன் மறைமுகமாக மோதல் அதாவது இந்தோனேசிய தொழிலாளர்களை சீன நிறுவனங்கள் கொடுமைப்படுத்தி வருகின்றன சமீபத்தில் மூன்று இந்தோனேசிய மீன்பிடி தொழிலாளர்கள் இதனால் மரணத்தை […]

Read More

இந்திய கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் சிகோர்ஸ்கி நிறுவனம் கையெழுத்திட்டது !!

May 15, 2020

அமெரிக்காவின் சிகோர்ஸ்கி நிறுவனம் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படைக்கு 24 எம்.ஹெச்60 ஆர் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தும் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த ஃபெப்ரவரி மாதமே இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில் இதற்கான எதிர்பார்ப்பு நிலவி கொண்டு இருந்தது. தற்போது ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் அமெரிக்க கடற்படையின் வெளிநாட்டு வர்த்தக வழிமுறைகளின் கீழ் நமக்கு இந்த ஹெலிகாப்டர்கள் விற்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் […]

Read More

இந்திய இராணுவத்தை இந்தியர்களுக்காக மாற்றிய பீல்டு மார்சல் கேஎம் கரியப்பா

May 15, 2020

இந்திய இராணுவத்தில் அதிக விருதுகள் பெற்ற தளபதிகளுள் ஒருவர்.இடையிலா தேசப் பக்தியுடன் சுடராய் விளங்கியவர் கொடன்டேரா மடப்பா கரியப்பா நிறைய சாதனைகள் செய்திருந்தாலும் இந்திய இராணுவத்தை முழுதும் இந்தியத்திற்கு மாற்றியது அவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாக உள்ளது.இதனால் தான் இன்று இந்திய தளபதி தலைமை தளபதியாக உள்ள பிபின் ராவத் அவர்கள் கரியப்பா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க நேரம் வந்துள்ளதாக கூறுகிறார்.இந்த நாள் வரையில் எந்த இராணுவ வீரர்களும் பாரத ரத்னா விருது பெற்றதில்லை.பாரத […]

Read More

காஷ்மீரின் 10முக்கிய பயங்கரவாதிகளை வேட்டையாட தயாராகும் ராணுவம் !!

May 15, 2020

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைவன் ரியாஸ் நாய்க்கூவை ராணுவம் கொன்ற பிறகு, காஷ்மீரின் 10 முக்கிய பயங்கரவாதிகளை வீழ்த்த ராணுவம் தயாராகி வருகிறது. அவர்களின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளது.1) ஸய்ஃபுல்லா(புதிய ஹிஸ்புல் தலைவன்)2) மொஹம்மது அஷ்ரஃப் கான்3)ஜூனையத் செராய்4)மொஹம்மது அப்பாஸ் ஷேக்5)ஸாஹீத் சர்கார்6)ஷாகுர்7) ஃபய்சல் பாய்8)ஷெராஸ் அல் லோன்9)சலீம் பரேய்10)ஒவாய்ஸ் முல்லிக்ஆகிய பத்து பயங்கரவாதிகள் ஆவர். அதிகாரப்பூர்வ தகவல்கள் படி , ஏப்ரல் மாதத்தில் மட்டும் […]

Read More

கேப்டன் சௌரப் அவர்களும் ஐந்து வீரர்களும்

May 15, 2020

கேப்டன் சௌரப் காலியா பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பதை அறிய இந்தியா இராணுவம் கேப்டன் காலியா தலைமையில் 5 துருப்புகள் நிலைமையை அறிய அனுப்பி வைத்தது. 1999–ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது அந்த ஆண்டு மே மாதம் 15–ந்தேதி கஸ்கார் பகுதியில் இந்திய ராணுவ கேப்டன் சவுரவ் காலியாவும், 4 சிப்பாய்களும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், சவுரவ் காலியா உள்ளிட்ட 5 பேரையும் சிறைபிடித்துச் சென்று அவர்களை கடுமையாக சித்ரவதை […]

Read More

லெப் கலோ உட்பட எல்லையில் இரு வீரர்கள் வீரமரணம்

May 15, 2020

வடக்கு சிக்கிமில் பனி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் குழு மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப் கலோ உட்பட இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். லெப்டினன்ட் கலோனல் ரோபெர்ட் டிஏ மற்றும் சாப்பர் சபலா சன்முக ராவ் ஆகிய இரு வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்துள்ளனர். வடக்கு சிக்கமில் பனியை அகற்றும் பணியில் வீரர்கள் குழு ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பனியில் சிக்கிய மற்ற 18 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது […]

Read More