Day: May 14, 2020

சீனாவின் முரட்டுத்தனத்தை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா !!

May 14, 2020

ஒரு வாரத்திற்கு முன்னர் சீன படையினரும் இந்திய படையினரும் மோதி பின்னர் பதற்றம் தணிந்த நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. லடாக்கின் தெம்சாக் பகுதியில் கல்வான் நாலா எனும் இடத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள வந்த சீன படையினர் அங்கேயே தங்கி உள்ளனர். தற்போதைய நிலையில் 5000 சீன துருப்புகள் மற்றும் 1000 கனரக ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த டோக்லாம் பிரச்சினைக்கு பின்னர் சீனா தற்போது […]

Read More

மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கியை விரைவில் இணைக்க தயாராகும் இந்தியா !!

May 14, 2020

இந்திய கடற்படை ஏற்கனவே திட்டமிட்டதை போல உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் மூன்றாவது நீர்மூழ்கி கப்பலை படையில் இந்த வருடம் இணைக்க உள்ளது. இந்த பெயரிடப்படாத கப்பல் “எஸ்4” திட்டத்தை சேர்ந்ததாகும். கொரோனா தொற்று காரணமாக மிக குறைந்த அளவு பணியாளர்களே பணியில் இருந்த நிலையில் கட்டுபாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என கூறப்படுகிறது. அரிஹந்த் மற்றும் அரிகாட் ஆகிய அணுசக்தியால் இயங்கும் நீர்முழ்கிகள் கட்டுமானம் நிறைவு பெற்று அரிஹந்த் படையில் இணைந்த […]

Read More

உதிரி பாகங்கள் சப்ளை நிறுத்தம் பாதிப்பில் இந்திய விமானப்படை !!

May 14, 2020

இந்திய விமானப்படை தனது பல்வேறு விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வந்து சேராத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வழங்கிய விமானங்களுக்கான உதிரி பாகங்களின் சப்ளை தடைபட்டதால் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஊரடங்கின் போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் வேலைநிறுத்தம் ஆகியவை கூறப்படுகிறது. சமீபத்தில் தான் அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சிறப்பு அனுமதி பெற்று பணிகளை துவங்கி […]

Read More

சிக்கிமீல் பனிச்சரிவு 16 ராணுவ வீரர்கள் மீட்பு, 1 வீரர் மாயம் !!

May 14, 2020

சிக்கீம் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த லுக்நாக் லா பகுதியில் கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே 17பேர் அடங்கிய ராணுவ ரோந்து குழுவும் வழி ஏற்படுத்தும் குழுவும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிகழந்த பனிச்சரிவில் அவர்கள் அனைவரும் சிக்கி கொண்டனர். தகவலறிந்து வந்து ராணுவ மீட்பு குழுவினர் 16வீரர்களை உயிருடன் மீட்ட நிலையில் 1வீரரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Read More

கமோர்ட்டா வகை நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள்

May 14, 2020

இந்தியக் கடற்படையின் மிக ஆபத்தான நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் பற்றி இந்த பதிவில் காணலாம். முன்னுரை நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் ஒரு நவீன கடற்படையில் இன்றியமையாத ஒன்றாகும்.வெளியில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு கப்பல் வகையாகவும் இது உள்ளது.பல கடற்படைகளில் இது போன்றதொரு வகை கப்பல்கள் இல்லாமல் உள்ளது.இதற்காக அந்த கடற்படைகள் வேறு பெரிய வகை கப்பல்களை நம்பி உள்ளனர்.ஆனால் வளர்ந்து வரும் நீர்மூழ்கி அச்சுறுத்தல்களுக்கு இது போன்ற கப்பல் வகை எல்லா நாட்டு கடற்படைக்கும் தேவையாக உள்ளது.உலகம் […]

Read More

இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை

May 14, 2020

15 நவம்பர் 1962. இந்தோ – சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் […]

Read More

MH-60R ரோமியோ-நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை அரக்கன்

May 14, 2020

இந்தியக் கடற்படைக்காக அமெரிககாவிடம் இருந்துMH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் வாங்கப்பட உள்ளது.இதுநாள் வரை பழைய சீகிங் வானூர்திகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.இவற்றை மாற்றுவதன் அவசியம் குறித்து ஏற்கனவே பல்வேறு முறை நமது பக்கத்தில் கூறியிருந்தோம்.ஒரு அதிநவீன டெஸ்ட்ராயர் போர்க்கப்பல் நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தி இல்லாமல் ஆழ்கடலுக்கு செல்வதள ஆபத்தானதே.அந்த குறை தற்போது நீக்கப்படுகிறது எனினும் ரோமியோ வானூர்திகள் குறைந்த அளவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ரோமியோ வானூர்தி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.நீர்மூழ்கி எதிர்ப்பு,கடற்பரப்பு இலக்குகளை அழித்தல்,தேடுதல் […]

Read More

ரஷ்யா எஸ்400 அமைப்பின் 400கிமீ தொலைவு செல்லும் ஏவுகணையின் திறனை நிருபித்து காட்டியது !!

May 14, 2020

சமீபத்தில் ரஷ்யா எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியான 9எம்83எம் ஏவுகணையை அதன் அதிகப்பட்ச தாக்குதல் தொலைவான 400கிம் வரை ஏவி அதன் திறனை நிருபித்துள்ளது. பாதுகாப்பு வல்லுனர்கள் இந்த சோதனை இந்தியா போன்ற நுகர்வோர் நாடுகளுக்கு நிருபித்து காட்டவே என கருதுகின்றனர். எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பில் 40கிமீ செல்லும் 9எம்96இ, 120கிமீ செல்லும் 9எம்96இ2, 250கிமீ செல்லும் 48என்6 மற்றும் 400கிமீ செல்லும் 9எம்83எம் போன்ற ஏவுகணைகள் உள்ளன. இந்தியா இதில் 250கிமீ […]

Read More

காஷ்மீரில் புதிய பயங்கரவாத குழுவை உருவாக்கியுள்ள பாகிஸ்தான்- தளபதி நரவனே

May 14, 2020

தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் என்ற புதிய பயங்கரவாத குழுவை காஷ்மீரில் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாக இராணுவ தளபதி நரவனே கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ வழிகாட்டுதல் படி காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்களை இந்த அமைப்பு தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார். இதை நான் டெடர் ரிவைல் ப்ரான்ட் என அழைப்பேன்.மற்றும் ஒரு பெயரில் மற்றும் ஒரு பயங்கரவாத குழு.எல்லைக்கு அப்பால் உள்ளவர்களின் துணையுடன் இயங்குகிறது.இதை தகுந்த முறையில் நாங்கள் எதிர்கொள்வோம் என தளபதி கூறியுள்ளார். மேலும் காலநிலை மாறி […]

Read More

ஆள்பலத்தை அதிகரிக்கும் வகையில் ராணுவம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் !!

May 14, 2020

ஒரு புதிய திட்டத்தின் கீழ் இந்திய தரைப்படை துணை ராணுவப்படை வீரர்கள் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றும் வகையில் ஒரு சீர்திருத்தம் மேற்கொள்வதை குறித்து தரைப்படை தலைமையகம் பரிசீலனை செய்து வருவதாக தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தரைப்படையில் நிலவும் ஆள்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இதைப்போன்ற வேறு சில திட்டங்கள் குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று நாட்டின் திறம்வாய்ந்த இளைஞர்களை படையில் இணைய தூண்டும் வகையில் “மூன்று வருட சேவை” திட்டம் ஒன்றிற்கான வழிமுறைகள் […]

Read More