துணை ராணுவத்தினரை கடுமையாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் !!

  • Tamil Defense
  • May 2, 2020
  • Comments Off on துணை ராணுவத்தினரை கடுமையாக தாக்கியுள்ள கொரோனா வைரஸ் !!

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான மத்திய ரிசர்வ் காவல்படையின் 33ஆவது பட்டாலியனுடைய 122வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான சாம்பிள்களின் முடிவுகள் இனிமேல் தான் வர உள்ளன ஆகவே பாதிப்பு அதிகரிப்பது நிச்சயம்.
கடந்ந வாரத்தில் இந்த பட்டாலியனை சேர்ந்த ஒரு துணை ஆய்வாளர் மொஹம்மது இக்ரம் ஹீசைன் அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதனையடுத்து இந்த அதிவேக தொற்றினால் மத்திய ரிசர்வ் காவல்படையின் மருத்துவ பிரிவு பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்த 31ஆவது பட்டாலியன் தில்லியின் விஹார் நிலை 3 பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீரின் குப்வாராவில் பணியாற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின் வீரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.