Day: May 11, 2020

சிக்கிம் சம்பவத்திற்கு பிறகு இந்தியாவை இணைந்து செயல்பட அழைக்கும் சீனா

May 11, 2020

இரு நாட்டு வீரர்களும் எல்லையில் மோதிக்கொண்ட சம்பவத்தை பெரிதாக்க விரும்பாத சீனா வேறுபாடுகளை மறந்து அமைதியை முன்னிறுத்தி இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளது. சீனத்தரப்பில் காயம்பட்ட வீரர்களை பற்றி எந்த தகவலும் வெளியிட விரும்பாத சீன வெளியுறவு அமைச்சகம் இந்திய வீரர்கள் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது. சிக்கிமில் 5000 அடி உயரத்தில நாகு லா பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கிடையான பேச்சுவார்த்தை சண்டை மோதலாக வெடித்தது.இதன் காரணமாக இருநாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டது. லோக்கல் […]

Read More

சத்திஸ்கரில் மவோயிஸ்டுகளுடனான மோதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

May 11, 2020

சத்திஸ்கரின் பஸ்தர் பகுதயில் நடைபெற்ற மோதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதியம் 2.15 அளவில் பிஜப்பூர் மாவட்டத்தின் உரிப்பால் கிராமம் அருகே இந்த சண்டை நடைபெற்றதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சிஆர்பிஎப் 170 பட்டாலியனைச் சேர்ந்த முன்னா யாதவ் என்ற வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.ஞாயிறு அன்று இரவு சிஆர்பிஎப் படையின் சிறப்பு படை மற்றும் மாநில காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் படை இணைந்த சிறப்பு குழு ஒன்று ஆபரேசன் தொடங்கியதாக […]

Read More

ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ்; விரைவில் ஒப்பந்தம் !!

May 11, 2020

ஃபிலப்பைன்ஸ் நாடு நமது பிரம்மாஸ் ஏவுகணைகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதிவேக பிரம்மாஸ் ஏவுகணைகளை சீன கடற்படைக்கு எதிராக பயன்படுத்தி கொள்ள ஃபிலப்பைன்ஸ் திட்டம் போட்டு உள்ளது. இதன் காரணமாக ஃபிலப்பைன்ஸ் ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த வாரம் ஃபிலப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் ஃபிலப்பைன்ஸ் பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லொரேன்ஸா செய்தியாளர்களிடம் விரைவில் இரண்டு பேட்டரி அளவிலான பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் […]

Read More

தேசிய பாதுகாப்பு படையிலும் கொரோனா !!

May 11, 2020

தேசிய பாதுகாப்பு படையின் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து துணை ராணுவப்படைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது. தேசிய பாதுகாப்பு படையில் இது முதல் சம்பவமாகும். பாதிக்கப்பட்டவர் மானேசரில் உள்ள தேசிய பாதுகாப்பு படையின் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் நொய்டாவில் உள்ள துணை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேசிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “பாதிக்கப்பட்ட வீரர் தற்போது […]

Read More

மண்ணாசையால் எவரெஸ்ட் சிகரத்தையும் குறிவைக்கும் சீனா !!

May 11, 2020

நேற்றைய தினம் சீன அரசு ஊடகமான சைனா க்ளோபல் டிவி நெட்வொர்க் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில் எவரெஸ்ட் சிகரம் சீனாவின் பகுதியில் உள்ளது என பதிவிட்டு இருந்தது. இதனையடுத்து நேபாளத்தில் கடுமையான கொந்தளிப்பு உருவாகியது, பல ஆயிரம் ஆண்டுகளாக நேபாள நாட்டிற்கு சொந்தமாக இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை சீனா எப்படி உரிமை கோரலாம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ட்விட்டரில் சீன அரசு மற்றும் நேபாளத்தில் உள்ள சீன தூதரகத்தை நேபாள மக்கள், ஊடகத்தினர் […]

Read More

தேசிய தொழில்நுட்ப தினமும் அணு ஆயுத சோதனையும் !!

May 11, 2020

கடந்த 1998ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டில் மே11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இதே நாளில் 22ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான அணு ஆயுத சோதனைகள் ஆகும். 1998ஆம் ஆண்டு மே11 ஆம் நாள் தொலைக்காட்சியில் நாட்டிற்கு உரையாற்றிய அன்றைய பாரத பிரதமர் காலம் சென்ற திரு அடல் பிஹாரி வாஜ்பாய் “இன்று 3.45 மணிக்கு இந்தியா மூன்று அணு ஆயுத சோதனைகளை பொக்ரானில் வெற்றிகரமாக […]

Read More

இந்திய விமானப்படைக்கு விரைவில் அடுத்த தலைமுறை பிரம்மாஸ் !!

May 11, 2020

பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவமை அதிகாரி முனைவர் சுதீர் குமார் மிஷ்ரா ஆன் மனோரமா எனும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ” இந்திய விமானப்படை நீண்ட தூரம் செல்லக்கூடிய பெரிய ஏவுகணைகளை தனது சுகோய் விமானங்களில் இணைக்கும் பொறுப்பினை தந்தது. நாங்களும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு விமானத்தை முதலில் உருமாற்றம் செய்தோம். அதன் ஏவியானிக்ஸ் நவீனபடுத்தப்பட்டது, அதன் உடலமைப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் ஏவுகணையின் எடை 2.9 டன்களில் இருந்து 2.5 டன்கள் ஆக குறைக்கப்பட்டது. சுகோய்30 விமானத்தின் […]

Read More

சொந்த கடற்படை கப்பலையே தாக்கி அழித்த ஈரான்-40 வீரர்கள் உயிரிழப்பு

May 11, 2020

ஈரான் நாட்டு கடற்படை கப்பல் ஒன்று தனது சொந்த கடற்படையை சேர்ந்ந மற்றொரு கப்படை தாக்கி அழித்துள்ளது.இந்த தாக்குதலில் நாற்பது மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஈரான் கடற்பகுதியில் பந்தர் இ ஜாஸ்க் என்னும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.கிடைத்த தகவல்படி கப்பலில் இருந்த 40 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் கடற்படையின் மோட்ஜ் ரக பிரிகேட் கப்பல் ஒன்று அதே கடற்படையின் கொனாராக் ரக கப்பலில் மீது கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வீசி தாக்கியழித்துள்ளது.

Read More

ஹிஸ்புல் பயங்கரவாத படைக்கு புதிய தளபதி-ரியாஸ் நைக்கூவிற்கு பிறகு இராணுவத்தின் வேட்டை

May 11, 2020

காசி ஹைதர் என்பவனை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு காஷ்மீருக்கான புதிய ஆபசேனல் தளபதியாக நியமித்துள்ளது. காஷ்மீரில் சில நாட்களுக்கு முன் ஹிஸ்புல் அமைப்பின் முக்கிய டாப் கமாண்டரான ரியாஸ் நைக்கூவை நமது பாதுகாப்பு படைகள் நைத்து எடுத்த பிறகு இந்த முடிவை அப்பயங்கரவாத இயக்கம் எடுத்துள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத படையின் செய்தி தொடர்பாளர் சலீம் ஹஷாமி வெளியிட்டுள்ள தகவல்படி, ஹிஸ்புல் பயங்கரவாத தலைவர் செய்து சலாவுதீன் மற்றும் பாக்கை மையமாக கொண்டு இயங்கும் பாக் ஐஎஸ்ஐ […]

Read More

2030ல் இந்தியா உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த கடற்படையை கொண்டிருக்கும் !!

May 11, 2020

2030ஆம் ஆண்டு வாக்கில் உலகில் சக்தி வாயந்த கடற்படைகளை கொண்டிருக்கும் நாடுகள் தங்களது சக்தியை தக்கவைத்து கொள்ளவும் அதிகரித்து கொண்டே வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் தங்களது கடற்படை சக்திகளை அதிகரித்து கொள்ளும். தற்போது கடல்சார் சக்தி உலகின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது இது 2030ஆம் ஆண்டு வாக்கில் வேகம் பிடிக்கும்.இதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் ஆசிய கண்டத்தில் உருவாகி வருவதே ஆகும். இதன்படி சீனா மற்றும் இந்தியா முதல் 5 […]

Read More