Day: May 9, 2020

சிஆர்பிஎப் வீரர்களின் உணவுத் தரம் எப்படி? நேரடி அலசல் பதிவு !

May 9, 2020

மத்திய ஆயுதம் தாங்கிய காவல் படை வீரர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாய் சில மாதங்களுக்கு முன் ஒரு குற்றச்சாட்டு வெளியானது.அதே போல எல்லைப் பாதுகாப்பு படையில் தேஜ் பகதூர் என்ற வீரர்கூட குற்றச்சாட்டு முன்வைக்க அந்த பிரச்சனை பெரிதாய் வெடித்து அந்த வீரரை படையில் இருந்தே வெளியேற்றியது மத்தியஉள்துறை அமைச்சகம். ஆனால் உண்மையாகவே குறைபாடான உணவு தான் வழங்கப்படுகின்றனவா என இராணுவத்திலும் சிஆர்பிஎப் போன்ற படைகளிலும் பணிபுரியும் எனது நண்பர்களிடம் கேட்டேன்.இராணுவத்தில் உணவு என்பது தரமானதாகவும் சத்தானதாகவும் […]

Read More

பாதுகாப்பு தாழ்வார கொள்கையில் மாற்றங்கள் செய்ய உள்ள உபி அரசு !!

May 9, 2020

உத்தர பிரதேச மாநில அரசு ஆக்ரா, லக்னோ, கான்பூர், சித்ராகூட் மற்றும் ஜான்ஸி ஆகிய நகரங்களை இணைத்து ஆயுதங்களை தயாரிக்க உருவாக்கப்படும் பாதுகாப்பு தாழ்வார கொள்கையை தமிழகம் மற்றும் குஜராத் மாநில கொள்கைகளில் சிலவற்றை பெற்று மேம்படுத்த உள்ளது. கடந்த ஃபெப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் மேற்குறிப்பிட்ட 5 நகரங்களில் சுமார் 5000ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட உள்ளது. ஏற்கனவே சுமார் 4000 கோடி ருபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ள இத்திட்டம் சுமார் 20,000 கோடி ருபாய் […]

Read More

ப்ளாக் ஹார்னெட் !!

May 9, 2020

“ப்ளாக் ஹார்னெட்” என்பது நார்வே நாட்டை சேர்ந்த ப்ராக்ஸ் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மிகச்சிறிய அளவிலான கையடக்க உளவு விமானமாகும். இது தற்போது அமெரிக்காஇங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது. இது 4×1 இன்ச் என்ற அளவில் இருக்கும், பேட்டரியையும் சேர்த்து இதன் எடை வெறுமனே 16கிராம்கள் தான். இது கிட்டத்தட்ட அமைதியானது, மிக நெருங்கி சென்று கண்காணிக்க உதவும்,மேலும் நேரலையில் உயர்தர வீடியோ மற்றும் புகைப்பணங்களை […]

Read More

தென்கொரியா ஏவுகணை சோதனை !!

May 9, 2020

தென்கொரியா கடந்த மாதம் தனது ஹ்யூன்மூ-4 ரக குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இச்சோதனையில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளில் ஒன்று தோல்வியை தழுவி உள்ளது. ஹ்யூன்மூ-4 ரக ஏவுகணை ஹ்யூன்மூ-2சி ஏவுகணையின் மேம்படுத்த பட்ட வடிவமாகும்.இது முந்தைய ஹ்யூன்மூ-2சி ஏவுகணையை விட அதிக எடையை சுமக்கும் (1000 கிலோ வெடிபொருள்). இந்த ஏவுகணையானது வடகொரிய பங்கர்களை தகர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Read More

அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகும் படைகள்-37 ஓடுதளங்களை நவீனப்படுத்த முடிவு

May 9, 2020

விமானப்படை,கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 37 ஓடுதளங்களை நவீனப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.டாடா பவர் நிறுவனத்துடன் 1200கோடிகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாஃபி 2 எனும் திட்டம் மாஃபி 1ன் தொடர்ச்சியாகும் இது நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படையின் 30 ஒடுதளங்களை மேம்படுத்தும் திட்டமாகும். இதன் முலம் ராணுவம் மற்றும் பொது பயனர்களும் பயனடைவர். இத்திட்டத்தின் மூலமாக கேட்-2 எனும் தரை இறங்குதல் அமைப்பு, கேட்-2 விமானதள ஒளிவிளக்கு அமைப்பு போன்றவை பொருத்தப்படும். […]

Read More

சத்திஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம்

May 9, 2020

சத்திஸ்கரில் பாதுகாப்பு படைகளுக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சத்திஸ்கர் காவல்துறை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளாார். நமது படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு நக்சல்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சத்திஸ்கர் காவல் துறையுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தினர்.இதில் இரு பெண் நக்சல்கள் உட்பட நான்கு நக்சல்கள் வீழ்த்தப்பட்டனர். சத்திஸ்கர் காவல் துறையின் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.பெரிய அளவிலான துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.

Read More

கண்ணிவெடி தாக்குதலில் ஆறு பாக் வீரர்கள் உயிரிழப்பு-பலுசிஸ்தான் போராளிகள் பொறுப்பேற்பு

May 9, 2020

பாக் இராணுவ அதிகாரி உட்பட ஆறு பாக் வீரர்கள தெற்கு பலுசிஸ்தான் பகுதியில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஈரான்-பாக் எல்லைக்கு அருகே 14கிமீ தூரத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பாக்கின் கெச் மாவட்டத்தின் புலெடா என்னும் சமவெளி பகுதியில் இருந்து வாகனங்களில் திரும்பி வந்து கொண்டிருந்த ஃப்ரான்டியர் கார்ப்ஸ் தெற்கு பலுசிஸ்தான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாக் இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அதிகாரி மேஜர் நதீம் அப்பாஸ் பாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது.பலுசிஸ்தான் […]

Read More

லெப்டினன்ட் உமர் பயஸ்

May 9, 2020

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கமளிக்கும் உமர் பயாஸை பற்றிய உண்மைகள் . டிசம்பர் 10, 2016ல் ராஜபுதன ரைஃபிளின் இரண்டாவது பட்டாலியனில் லெப்டினன்ட்டாக இருந்த லெப் உமர் ஒரு திருமண நிகழ்விற்காக ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள தன் உறவினர் இல்லத்திற்கு சென்ற போது மே 9-ஆம் தேதி இரவு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புரல் முஜாகிதீன் தீவிரவாகளால் கடத்தப்பட்டு மே 10ல் கொல்லப்பட்டார். அவருடைய தந்தை சிறு விவசாயி.அவருக்கு இரு சகோதரிகளும் உள்ளனர். அவருடைய தந்தை ஆப்பில் […]

Read More

விமானப்படைக்கு பெரிதும் உதவும் சின்னூக் வானூர்தி

May 9, 2020

இணைக்கப்பட்டது முதல் சின்னூக் வானூர்தி படைகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.கடந்த 2019 மார்ச் படையில் இணைக்கப்பட்டது முதல் பல்வேறு கட்ட இராணுவ/சிவில் பணிகளுக்கு சின்னூக் வானூர்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துவித கடினமான பணிகளையும் மிக எளிமையாக செய்துமுடிக்க சின்னூக் எடை தூக்கும் போக்குவரத்து வானூர்தி உதவுகிறது. படத்தில் உள்ளது போல குன்ஜி என்னுமிடத்திற்கு கட்டுமான பொருள்களை கொண்டு செல்ல சின்னூக் வானூர்தி பெரிதும் உதவியுள்ளது.இந்த பகுதி 10500 அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைலாஷ் மானசரோவர் என்னுமிடத்திற்கு […]

Read More

514 துணை இராணுவத்தினருக்கு கொரானா தொற்று-5 வீரர்கள் உயிரிழப்பு

May 9, 2020

கொரானா போரில் முன்னனி போர் வீரர்களான திகழும் துணை இராணுவ படை வீரர்கள் 514 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படை,எல்லைப் பாதுகாப்பு படை,இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிலக காவல் படை, சஹாஸ்திர சீம பால் ஆகிய படை வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது.இதில் 450 வீரர்கள் டெல்லியில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் […]

Read More