Breaking News

Day: May 6, 2020

காஷ்மீர் என்கௌன்டர்: மூன்றாவது பயங்கரவாதியை வீழ்த்திய வீரர்கள்

May 6, 2020

புல்வாமாவில் க்ரீவ் கிராமத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்றாவது பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்திய நிலையில் தற்போது மூன்றாவது பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான். ஹிஸ்புல் கமாண்டர் ரியாஸ் நைக்கூ வீழ்த்தப்பட்டான்.புர்கன் வானிக்கு பிறகு இவன் பெரிய பயங்கரவாதியாக பேசப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இரு பயங்கரவாதிகளை போட்டுத்தள்ளிய இராணுவ வீரர்கள்

May 6, 2020

காஷ்மீரின் புல்வாமாவில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக மூன்று இடங்களில் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே இந்த சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

காஷ்மீரில் ஊடுருவ தயாராக உள்ள 400 ஜெய்ஷ் பயங்கரவாதிகள் !!

May 6, 2020

ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பு ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தனது பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற சுமார் 400 பயங்கரவாதிகளை காஷ்மீரில் ஊடுருவ வைக்க தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஆஃப்கன் படைகள் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை ஒன்றில் பல ஜெய்ஷ் பயங்கரவாதிகளை ஒரு முகாமில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அப்போது அங்கு பிடிப்பட்ட ஸரார் எனும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை பூர்வீகமாக கொண்ட பயங்கரவாதி எங்களை […]

Read More

பெல் நிறுவனத்தின் 30மிமீ கடற்படை துப்பாக்கி !!

May 6, 2020

நமது பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கடற்படைக்கென 30மிமீ துப்பாக்கி ஒன்றினை தயாரித்து வருகிறது. இது இரவு மற்றும் பகலில் சுடும் திறன் கொண்டதாக இருக்கும். இது சிறிய ரக கலன்களுக்கு பிரதான ஆயுத அமைப்பாக இருக்கும். இது நேட்டோவின் 30×173மிமீ அளவுள்ள குண்டுகளை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Read More

காஷ்மீரில் மூன்று வெவ்வேறு இடங்களில் என்கவுன்டர் !!

May 6, 2020

காஷ்மீரின் புல்வாமாவில் இன்று காலை என்கவுன்டர் தொடங்கி உள்ளது, இதில் காஷ்மீரின் ஹிஸ்புல் தளபதியான ரியாஸ் நாய்க்கூ சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாம்போரில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும், அவந்திபோராவின் பேய்க்போராவில் மற்றொரு என்கவுன்டர் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. ரியாஸ் நாய்க்கூ இன்று கொல்லப்பட்டால் அது மிகப்பெரிய வெற்றியாகும்.

Read More

தள்ளிப்போகும் வெளிநாட்டு ஆயுத ஒப்பந்த பணத்தை உள்நாட்டில் திருப்பி விட திட்டம் !!

May 6, 2020

முப்படைகளுக்கென வெளிநாடுகளில் இருந்து வாங்கும் ஆயுதங்கள் சார்ந்த ஒப்பந்த பணத்தை உள்நாட்டு ஒப்பந்தங்களில் திருப்பி விட அரசு நினைக்கிறது. இதன்படி பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம் டெலிவரிக்கான கால அவகாசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிக காலதாமதம் ஆகும் திட்டங்களுக்கான பணம் உள்நாட்டில் திருப்பி விடப்படும். இதன் காரணமாக சுமார் 2000 இந்திய நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 39,000கோடி மதிப்பிலான 83 தேஜாஸ் விமானங்கள், 6000கோடி மதிப்பில் ஆறு ஸ்க்வாட்ரன் ஆகாஷ் […]

Read More

இந்தியர்களை மீட்க மாபெரும் நடவடிக்கை-ஆபரேசன் சமுத்ர சேது

May 6, 2020

கடல் பாலம் என தமிழில் மொழிபெயர்க்க தக்க மபெரும் நடவடிக்கையை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது. கொரானா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதே இந்த திட்டத்தின் நோக்கம். மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஜலஷ்வா மற்றும் மகர் கப்பல்கள் அங்கு சென்றுகொண்டிக்கின்றன.மே 8 முதல் அங்கு இந்தியர்களை இவ்விரு கப்பல்களும் மீட்கும்.இது முதல் கட்ட மீட்பு பணி ஆகும். முதல் பயணத்தின் போது கிட்டத்தட்ட 1000 இந்தியர்கள் மீட்கப்படலாம் என தகவல்கள் […]

Read More