Day: May 5, 2020

லான்ஸ் நாய்க் தினேஷ் சிங் அவர்களின் திருவுடல் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம்

May 5, 2020

ஹேண்ட்வாரா என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த லான்ஸ் நாய்க் தினேஷ் சிங் அவர்களின் திருவுடல் இன்று முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அல்மோரா மாவட்டத்தில் அவரது கிரமமான மிர்கானில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது. ஹேன்ட்வாராவில் பாக் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் நடந்த மோதலில் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலில் பாக்கின் முக்கிய லஷ்கர் கமாண்டர் ஹைதர் உட்பட இரு பயங்கரவாதிகள் இந்த என்கௌன்டரில் கொல்லப்பட்டனர்.பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட பொதுமக்கள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மேஜர் அனுஜ் அவர்களின் திருவுடல் முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம்

May 5, 2020

ஹேண்ட்வாரா என்கௌன்டரில் வீரமரணம் அடைந்த மேஜர் அனுஜ் அவர்களின் திருவுடல் இன்று முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சந்திமந்திர் கமாண்ட் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுடல் காலை பஞ்குலாவின் அமராவதி என்கிளேவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வளரும் போதே இராணுவத்தில் தான் இணைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வளர்ந்தவர் மேஜர் என அவரது குடும்பத்தினர் கணணீர் மல்க கூறியுள்ளனர். வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே மற்றும் மேஜர் அனுஜ் அமர் ராஹே […]

Read More

சிஆர்பிஎப் வீரர் சந்திரகேசர் அவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் நிதி உதவி- தமிழக அரசு

May 5, 2020

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த CRPF வீரர் சந்திரசேகருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துளளார்.அத்துடன் அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹேன்ட்வாரா பகுதியின் காசியபாத் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.குப்வாராவின் கிரால்குன்ட் ஏரியாவில் வங்கம்-காசியபாத் பகுதியில் சென்ற சிஆர்பிஎப் ரோந்து குழுவின் […]

Read More

காஷ்மீரில் பத்கமில் பாதுகாப்பு படைகள் மீது மீண்டும் கிரேனேடு தாக்குதல்

May 5, 2020

காஷ்மீரின் பத்கம் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் மீது கிரேனேடு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்கமின் பாகெர்போரா மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 181வது பட்டாலியன் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீசப்பட்ட கிரேனேடு வீரர்களிடம் இருந்து சற்று தள்ளி வெடித்ததால் வீரர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. கூட்டத்தை பயன்படுத்தி பயங்கரவாதி தப்பிவிட்டான்.தற்போது மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தேடுதல் வேட்டை […]

Read More

கொரோனா பாதிப்பில் எல்லை பாதுகாப்பு படை !!

May 5, 2020

எல்லை பாதுகாப்பு படையின் 67 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24பேர் திரிபுரா மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர். தில்லியில் 41 வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் திங்கட்கிழமை அன்று தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இரண்டு தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஒரு வீரர் சொந்த ஊரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த மாவட்டத்தில் உள்ள […]

Read More

புதிய என்ஜின் தயாரிக்க அனுமதி கோரிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு !!

May 5, 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு காவேரியை விட முற்றிலும் புதிய என்ஜின் ஒன்றினை தயாரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அரசும் இதற்கான அடிப்படை திட்டவரைவை கேட்டுள்ளது. காவேரி என்ஜின் தேஜாஸ் விமானத்திற்கு தேவையான திறனை அளிக்காத காரணத்தால் அது மொத்தமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய என்ஜின் காவேரியில் இருந்து எதையும் பெறாது எனவும் முற்றிலும் புதியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Read More

21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணிக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம் !!

May 5, 2020

முன்தினம் 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனுடைய கட்டளை அதிகாரிகள் கர்னல் அஷூதோஷ் ஷர்மா மற்றும் அவரது கம்பனி கமாண்டர் மேஜர் அனுஜ் ஸூத் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணிக்கு புதிய தலைமையை தேர்வு செய்ய ராணுவ நிர்வாகம் முடிவு செய்ததது. 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் “ப்ரிகேட் ஆஃப் கார்ட்ஸ்” ரெஜிமென்ட்டை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களால் ஆனது. இதனையடுத்து இந்த ரெஜிமென்ட்டின் மூத்த அதிகாரியும், தரைப்படையின் மத்திய கட்டளையக தளபதியுமான […]

Read More

எல்லைப் பாதுகாப்பு படை தலைமையகம் வரை சென்ற கொரானா-42 வீரர்களுக்கு தொற்று

May 5, 2020

டெல்லியில் எல்லைப் பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணிபுரிந்து வந்த வீரர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு இரு மாடிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தில்லியகன் லோதி சாலையில் உள்ள சி.ஜி.ஒ காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படையின் 8 தளங்கள் கொண்ட தலைமை அலுவலகத்தில் முதல் இரண்டு தளங்கள் தற்போது சீல் செய்யப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட வீரருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

Read More

20வருடங்களில் 2 கட்டளை அதிகாரிகளை இழந்த தரைப்படையின் 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் !!

May 5, 2020

முன்தினம் ஹன்ட்வாரா பகுதியில் நடைபெற்ற சண்டையில் பொதுமக்களை மீட்கும் போது 21ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸின் கட்டளை அதிகாரி, 1 மேஜர் மற்றும் 2 ஜவான்கள் வீரமரணமைடந்தனர். கர்னல் அஷூதோஷ் ஷர்மா (40வயது) 20வருடங்கள் நாட்டிற்கு சேவை செய்துள்ளார். அவரது சீனியர் மற்றும் ஜூனியர் அதிகாரிகள் அவர் மிகுந்த உற்சாகம் கொண்டவர் எனவும் தனது வீரர்களுடன் நேரம் செலவிட விரும்புவர் எனவும் தெரிவித்தனர். மேலும் ராணுவத்தில் அதிகாரியாக இணைய முயற்சி செய்து 13ஆவது முறை வெற்றி பெற்றவர் ஆவார். […]

Read More

காஷ்மீரில் மீண்டும் லஷ்கர் இ தொய்பா !!

May 5, 2020

கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீரின் அமைதியை குலைக்க பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக பயங்கரவாதிகளை நன்கு ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தியது. இதன்படி தனக்கு எந்த சிக்கலும் வராத வகையில் ஒரு பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கியது. ஆனால் இது பெயரில் மட்டுமே புதிதாக உள்ளது. காரணம் ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற இயக்கங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை […]

Read More