Day: May 4, 2020

மத்திய தொழிலக பாதுகாப்பு படை கேம்பில் பயங்கவாத தாக்குதல்-ஒரு வீரர் காயம்

May 4, 2020

காஷ்மீரின் ஸ்ரீநகரின் நௌகம் ஏரியாவில் அமைந்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் கிரேனேடு வீசி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் காயமடைந்துள்ளார். நௌகம் பகுதியின் வகூரா ஏரியாவில் உள்ள ஒரு முக்கிய பவர் சார் தொழிலகத்தை சிஐஎஸ்எப் வீரர்கள் காவல் காத்து வருகின்றனர்.அங்குள்ள காவல் மாடத்தில் தான் பயங்கரவாதிகள் கிரேனேடு வீசி தாக்கியுள்ளனர். இதில் ஒரு சிஐஎஸ்எப் வீரர் காயமடைந்துள்ளார்.

Read More

காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்-3 வீரர்கள் வீரமரணம்

May 4, 2020

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹேன்ட்வாரா பகுதியின் காசியபாத் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் மூன்று சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.குப்வாராவின் கிரால்குன்ட் ஏரியாவில் வங்கம்-காசியபாத் பகுதியில் சென்ற சிஆர்பிஎப் ரோந்து குழுவின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் ஏழு சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். மொத்த பகுதியும் தற்போது சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Read More

மீண்டும் நெருங்க முனையும் இந்தியா மற்றும் ரஷ்யா !!

May 4, 2020

இந்திய ரஷ்ய உறவு என்பது வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, அதற்கு நாம் இன்று பயன்படுத்தி வரும் மிக்21 விமானங்கள் முதல் இனி வரவுள்ள எஸ்400 வரை சாட்சியாகும். ஆனால் சீனாவுடனான மோதலால் இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்ந்தது, அதை போலவே ரஷ்யா மேற்கு நாடுகளுடனான மோதல் காரணமாக சீனா பக்கம் சாயந்தது. இவை எல்லாம் சர்வதேச அரசியலின் விளைவு என்றாலும் இரு நாடுகளும் தங்களது உறவுகள் முற்றிலும் துண்டிக்கபடாமல் பார்த்து கொண்டன. பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு […]

Read More

இந்தியா தனது அணு ஆயுதங்களை புதுப்பித்தல் வேண்டுமா ??

May 4, 2020

சமீபத்தில் அமெரிக்கா சீனாவின் லோப் நூர் பகுதியில் சீனா தனது அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக கூறியது. மேலும் சீனா தனது அணு ஆயுதங்களை புதுப்பித்து அல்லது நவீனபடுத்தி வருவதாகவும் தெரிகிறது. ஆகவே இந்தியா தனது அணு ஆயுதங்களை புதுப்பித்தல் வேண்டும் என பாதுகாப்பு வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் காரணம் இதனை செய்யாவிட்டால் ஒரு வேளை அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் சூழலில் அவை சரிவர இயங்காமல் போகலாம் என்கின்றனர். இன்றைய உலகில் அணு ஆயுத […]

Read More

காஷ்மீரில் புல்வாமைவிடவும் மோசமான தற்கொலைப்படை தாக்குதல் உளவுத்துறை எச்சரிக்கை !!

May 4, 2020

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பயங்கரவாதிகளை கடுமையாக ஒடுக்கி வருவதால் பயங்கரவாத இயக்கங்கள் ஆத்திரத்திலும் விரக்தியிலும் உள்ளன. இதனையடுத்து ஜெய்ஷ் இ மொஹம்மது இயக்கம் மே மாதம் 11ஆம் தேதி காஷ்மீரில் மிகப்பெரிய அளவில்தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை தகவல்கள் படி, ஜெய்ஷ் இ மொஹம்மது முக்கிய தளபதிகளில் ஒருவனான முஃப்தி அப்துல் ரவூஃப் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் இடையில் சமீபத்தில் நடந்த சந்திப்பில் இது குறித்து […]

Read More

ஈராக், சிரியாவில் அமெரிக்க படைதளங்கள் மீது ரேடாரில் சிக்காமல் பறந்த ரஷ்ய போர் விமானங்கள் !!

May 4, 2020

ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சில அமெரிக்க படைதளங்கள் மீது ரஷ்ய விமானப்படையின் சு57 ரக விமானங்கள் கண்டுபிடிக்க படாமல் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி ரஷ்ய உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் ரஷ்ய விமானங்கள் துருக்கி வான்வெளியை பயன்படுத்த துருக்கி தடை விதித்துள்ளது ஆகவே சிரியாவில் இருந்து ஈராக்குக்கு செல்கையில் அமெரிக்க படைதளங்கள் மீது தான் பறக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இப்படி ஒரு பயணத்தில் தான் சு57 விமானங்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் தலா […]

Read More

குவாம் தீவுக்கு குண்டுவீச்சு விமானங்களை அனுப்பி உள்ள அமெரிக்கா !!

May 4, 2020

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டையஸ் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்க விமானப்படை தனது பி1பி லான்ஸர் விமானங்களை தென்சீனக்கடல் பகுதியில் உள்ள குவாம் தீவில் ஆன்டர்ஸன் படைதளத்திற்கு அனுப்பி உள்ளது. இதனை அமெரிக்க விமானப்படையின் பசிஃபிக் கட்டளையகம் உறுதி செய்துள்ள நிலையில், இந்த விமானங்கள் எத்தனை நாள் அங்கு இருக்கும் என பெண்டகன் எதுவும் கூறவில்லை. சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மலேசியா அருகே மேற்கு கபெல்லாவில் […]

Read More