இந்தியா தயாரிக்க போகும் உலகின் முதல் 5.5ஆவது தலைமுறை அதிநவீன போர்விமானம் !!

இந்தியா AMCA எனும் அதிநவீன ஸ்டெல்த் விமானத்தை உருவாக்த உள்ளது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தற்போது வரை 5ஆம் தலைமுறை விமானமாக கருதப்பட்டு வந்த நிலையில் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இது உலகின் முதல் 5.5 ஆவது தலைமுறை விமானம் ஆகிறது.

RCS – Radar Cross Section, DSI – Diverterless Supersonic Intake என்ற இரு தொழில்நுட்பங்களால் தற்போதுள்ள 5ஆம் தலைமுறை விமானங்களை விட ரேடாரில் சிக்காத தன்மை அதிகம் ஆக இருக்கும் மேலும் இந்த DSI தொழில்நுட்பத்தால் விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.

இந்த விமானமானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவியானிக்ஸ் மற்றும் மின்னனு கருவிகளை கொண்டு இருக்கும் மேலும் அடுத்த தலைமுறை அதிநவீன ஆயுதங்களை சுமக்கும். இந்த விமானங்களை விமானி இல்லாமலேயே இயக்க முடியும் இத்தகைய அம்சங்கள் இந்த விமானத்தை தற்போதுள்ள 5ஆம் தலைமுறை விமானங்களை விட பன்மடங்கு பலம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

இந்த விமானத்தின் முழு சோதனை வடிவம் VEM நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு DRDO விடம் ஒப்படைக்கப்படும், அந்த சோதனை வடிவமானது இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் சித்ரதுர்காவில் உள்ள சோதனை கூடத்தில் சோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.