1917பில்லியன் அமெரிக்க டாலர்கள்; உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவழித்த பணம் !!

  • Tamil Defense
  • April 30, 2020
  • Comments Off on 1917பில்லியன் அமெரிக்க டாலர்கள்; உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவழித்த பணம் !!

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் உலக நாடுகள் ராணுவத்திற்கு செலவழிப்பது சுமார் 7.2 சதவீதமும், 2018ஆம் ஆண்டை விட 3.6சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இது 1988க்கு பின்னர் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.

கடந்த வருடம் உலக நாடுகள் சுமார் 1917பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளன.
அதாவது இந்திய மதிப்பில் 145,939,201,216,915.50 ருபாய் ஆகும்.

இந்த பட்டியலில் அமெரிக்கா,சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

1)அமெரிக்கா – 732பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

2) சீனா – 261பில்லியன் அமெரிக்க டாலர்கள்

3) இந்தியா – 71.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

4) ரஷ்யா – 65பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

5) சவுதி அரேபியா – 62பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருபெரும் சக்திகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மேலும் ஜப்பான் 47.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் தென் கொரியா 43.9பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இந்த பட்டியலில் உள்ளன.

அமெரிக்கா மட்டுமே இதில் 38 சதவிகிதம் அளவுக்கு செலவழிக்கிறது, மேலும் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள் சுமார் 68% அளவுக்கு பங்கை கொண்டுள்ளன.

ஜரோப்பாவில் ஜெர்மனி 49.3பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறது. இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு சீராக உள்ளது.

உலகம் முழுவதும் புவிசார் அரசியல் மற்றும் பல ஆண்டு கால காழ்ப்புணர்ச்சிகள் பாதுகாப்பு சிக்கல்களை அதிகரித்துள்ளன.

தென்சீனக்கடல், ஆஃப்கானிஸ்தான், இந்திய பாகிஸ்தான் எல்லை, இந்திய சீன எல்லை, அமெரிக்க சீன பிரச்சினை, ஜப்பான் சீனா பிரச்சினைகள், ஈரான் மத்தியகிழக்கு பிரச்சினைகள், துருக்கியின் அடாவடித்தனம் என உலகம் முழுவதுமாக மோசமான பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்துமே எந்நேரத்திலும் போரை தூண்டக்கூடிய அளவுக்கு வீரியம் கொண்ட விஷயங்களாகும்.

ஆகவே பாதுகாப்பு செலவுகள் அதிகரிப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.