
இஸ்ரேலின் ரஃபேல் நிறுவனம் தயாரித்த பைத்தான் ஏவுகணைகள் இலகுரக தேஜாஸ் விமானத்தில் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட பின்னரும் அதில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
இதற்கு காரணம் இந்த ஏவுகணையை தேஜாஸ் சுமக்கும் போது விமான இறக்கையில் அதிக அளவில் அதிர்வுகளை உருவாக்குகிறது.
இதனை சோதிக்க விமானத்தில் இந்த ஏவுகணை பொருத்தப்பட்ட ஒரு போர் விமானம் வானில் சந்திக்க கூடிய அனைத்து வகையான சூழல்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில் தான் அதிர்வுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இந்த அதிர்வுகள் ஏவுகணையின் மின்னனு சாதனங்களை நாசம் செய்யக்கூடும்.இதனை சரி செய்து தர வேண்டியது ஏவுகணையை உருவாக்கிய நிறுவனத்தின் பொறுப்பாகும்.
ஆகவே தற்போது அந்த பிரச்சினையை சரி செய்யும்படி நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது அதன் பின்னர் சோதனைகள் நடத்தப்பட்டு தேஜாஸில் பயன்படுத்தப்படும்.
இந்த ஏவுகணை எதிரி போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், ஆளில்லா போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் க்ருஸ் ஏவுகணைகளை தாக்க பயன்படும்.