“நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம்” ;கொரானா பிரச்சனையை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் அதிபர் ட்ரம்ப்

  • Tamil Defense
  • April 24, 2020
  • Comments Off on “நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம்” ;கொரானா பிரச்சனையை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் அதிபர் ட்ரம்ப்

கொரானா பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா தற்போது தாங்கள் தாக்கப்பட்டது போல உணருகிறோம் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இது கொரானா பிரச்சனைக்கு ஒரு புது பரிமாணம் கொடுப்பது போன்று உள்ளது.

COVID-19 47,000 க்கும் அதிகமான மக்களின் உயிரைப் அமெரிக்காவில் பறித்துள்ளது.தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், இயல்புநிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளார்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் மட்டுமல்ல அது ஒரு தாக்குதல் என்று டிரம்ப் மேலும் கூறினார்.

புதன்கிழமை தனது தினசரி வெள்ளை மாளிகை செய்தி மாநாட்டில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய டிரம்ப், “நாங்கள் தாக்கப்பட்டோம், இது ஒரு தாக்குதல். இது ஒரு காய்ச்சல் மட்டுமல்ல. யாரும் இதுவரை 1917க்கு பிறகு இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில்லை” என கூறியுள்ளார்.

அமெரிக்கா சீனாவை விட மட்டுமல்ல அனைத்து நாடுகளை விடவும் அதிக பொருளாதார பலத்தை கொண்டிருந்தது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.