
வடகொரியாவின் ஏவுகணை திட்டங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அமெரிக்கா தற்போது தனது கடற்படையின் 3ஆவது படைப்பிரிவின் அங்கமான முதல் தாக்கதுதல் படையணியை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பி உள்ளது.
அமெரிக்க பசிஃபிக் கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் வடகொரியா ஒரு ஆபத்தான நாடாக திகழ்கிறது தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவை கண்காணிப்பது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா அனுப்பி உள்ள படையணியை வழிநடத்துபவர் அட்மிரல் நோரா டைசன் ஆவார். இவர் தலைமையில் ராட்சத நிமிட்ஸ் ரக விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் மற்றும் சில ஏவுகணை நாசகாரி கப்பல்கள் கொரிய தீபகற்ப பகுதிக்கு செல்கின்றன.
முதலில் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல இருந்த இப்படையணி தற்போது மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள கொரிய தீபகற்ப பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.