
காஷ்மீரின் ராஜோரியில் பாதுகாப்பு கட்டமைப்புகள் மீது பறந்த ஆளில்லா குட்டி விமானங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கட்டிடங்களை கானொளி எடுத்ததாக இந்த ட்ரோனை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜ்ஜார் மன்டி டிசி அலுவல சாலையில் இரவில் ரோந்து பணியில் சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் வானில் ஒரு பொருள் மின்னுவதை கண்டபின் உடனடியாக சுதாரித்துகொண்டு மற்ற அதிகாரிகளை அலட்ர் செய்துள்ளனர்.
ஆனால் உடனடியாக அதை அதிகாரிகளால் கைப்பற்ற முடியவில்லை.அதன் பிறகு விசாரணையை தொடங்கி தீவிரமாக தேடிய அதிகாரிகள் இது தொடர்பாக இருவரை கைது செய்து அந்த ட்ரோனுடன் சேர்த்து மற்ற பொருள்களையும் வெற்றிகரமாக கைப்பற்றினர்.
பாதுகாப்பு தொடர்பான இடங்களுக்கு அருகே இது போன்ற பொருள்கள் பறக்க தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.