Breaking News

பெருமைமிகு தருணம்- இந்தியாவிற்கு ராயல் சல்யூட் அடித்த ஐக்கிய நாடுகள் சபை

  • Tamil Defense
  • April 18, 2020
  • Comments Off on பெருமைமிகு தருணம்- இந்தியாவிற்கு ராயல் சல்யூட் அடித்த ஐக்கிய நாடுகள் சபை

இந்தியாவிலும் தொடர்ந்து கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் வேளையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கும் மனிதாபிமான முறையில் தொடர்ந்து உதவி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை செக்கரட்டரி அன்டோனிுயா குடெரேஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் மற்ற நாடுகளுக்கு தனது பாராட்டை பதிவு செய்தார்.அமெரிக்காவிற்கு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய பிறகு இந்த வாழ்த்தை அவர் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்கா உணவு மற்றும் ட்ரக் நிர்வாகத்தால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொரானா எதிராக சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்பு உலகம் முழுதுமே அதன் தேவை அதிகரித்தது.நியூயார்க்கில் சுமார் 1500 கொரானா நோயாளிகளுக்கும் இந்த மருந்து அளித்து பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தியா முதலில் இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடை விதித்து பின்பு தடை நீக்கி ஏற்றுமதி செய்ய தொடங்கியது.அன்று முதல் பல நாடுகளுக்கு இந்தியா முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்ய தொடங்கியது.

உலகில் தன்னால் உதவ முடியும் எனும் பட்சத்தில் மற்ற நாடுகளுக்கு அந்த நாடுகள் உதவ வேண்டும் என ஐநா செக்கரட்டரி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இந்தியா 2,800,000 பாக்கெட் பாரசிட்டமல் மாத்திரைகளை இங்கிலாந்திற்கு அனுப்பியது.அதற்கு இங்கிலாந்தும் தனது நன்றியை பதிவு செய்தது.

தற்போது அமெரிக்கா உட்பட 55 நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வருகிறது.

அமெரிக்கா,மொரிசீயஸ் மற்றும் சீசெல்ஸ் நாடுகள் ஏற்கனவே மருந்தை பெற்ற நிலையில் மற்ற நாடுகள் இந்த வார இறுதிக்குள் மருந்தை பெற உள்ளன.

அண்டை நாடுகளை பொறுத்த வரை ஆப்கன்,பூடான்,வங்கதேசம்,நேபால்,மாலத்தீவு,மொரிசீயஸ் ,ஸ்ரீலங்கா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா மருந்து அனுப்பியுள்ளது.