காஷ்மீரின் குல்கமில் 4 பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • April 26, 2020
  • Comments Off on காஷ்மீரின் குல்கமில் 4 பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்கம் என்னுமிடத்தில் பயங்கரவாதிகளின் இருப்பு குறித்த தகவல் இராணுவத்தை அடைந்தது.

ஆபரேசனை தொடங்க முடிவு செய்த இராணுவம் பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியில் படைகளை ஒருங்கிணைத்து அந்த பகுதிகளை முற்றுகை இட்டது.

என்கௌன்டர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அதன் பின் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஒரு இராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 8 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அங்கு ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.