காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

  • Tamil Defense
  • April 17, 2020
  • Comments Off on காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபற்ற என்கௌன்டரில் இரு பயஙாகரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.முன்னதாக ராணுவத்திற்கு பயங்கவாதிகள் இருப்பு குறித்த இரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதனையடுத்து பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்த இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் மாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆபரேசன் டியோர் என்னும் பெயரில் இராணுவம் தாக்குதலை தொடங்கியது.இந்த தாக்குதலில் முதலில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டதாக வடக்கு கட்டளையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிக அளவிலான ஆயுதங்களை இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.