சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; இரு வீரர்கள் வீரமரணம்

  • Tamil Defense
  • April 18, 2020
  • Comments Off on சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; இரு வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

நூர்பஹ் என்னுமிடத்தில் சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை குழு சென்றுகொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.இதில் மேலும் மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே இருந்த SDH மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அங்கு இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மற்ற வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.