
காஷ்மீரில் பாக் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புகளுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதின் உறுப்பினர்கள் அந்த அமைப்பில் இருந்து விலகி தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட அமைப்பில் சேருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின்.முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்பாஸ் ஷேக் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பு காஷ்மீர் காவலர்கள் மற்றும் மக்களை கொல்வதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் அமைப்பில் இணைந்துள்ளான்.
தற்போது அப்பாஸ் பாதுகாப்பு படைகள் மற்றும் ஹிஸ்புல் இயக்கத்திடம் இருந்து விலகி தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் அவனுக்கு ஆதரவாக 12பேர் உள்ளதாகவும் தெரிகிறது.
தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரான்ட் அமைப்பு ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கம் காஷ்மீர் காவலர்கள் மற்றும் மக்களை கொல்வதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தின் காஷ்மீர் பிரிவு தலைவர் ரியாஸ் நாய்க்கூ பாகிஸ்தானில் உள்ள ஹிஸ்புல் இயக்க தலைவன் சயத் சலாஹுதின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிகிறது.