Breaking News

சிபாய் விக்ரம் சிங்

சர்விஸ் நம்பர்: 3005411L

பிறந்த நாள் : Mar 15, 1983

இடம் :ரெவாரி ,ஹர்யானா

சேவை: இராணுவம்

தரம் : செபாய்

படைப்பிரிவு: 44 இராஷ்டீரிய ரைபிள்ஸ்

ரெஜிமென்ட்: இராஜ்புத்

விருது : சௌரிய சக்ரா

வீரமரணம் அடைந்த நாள் : ஏப்ரல் 25, 2014

செபொய் விக்ரம் சிங் ஹரியானாவில் உள்ள ரெவாரியில் மார்ச் 15 ,1983ல் பிறந்தார்.2002 அக்டோபர் 7ல் இராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்டின் 17வது பட்டாலியனில் இணைந்தார்.டிசம்பர் 2012 ,44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் வழியாக காஷ்மீரின் சோபியானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சென்றார்.செபாய் விக்ரம் சிங் அவர்களை அவரது நண்பர்கள் அமைதியாய் பேசும் நற்குணம் நிரம்பிய மனதுக்காரர் என கூறுகின்றனர்.அவர் நிறைய நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.எப்போதும் முன்னனியில் நிற்பவர்.

Shopian Operation : 25 April 2014

ஏப்ரல் 25 ,2014 அன்று சோபியானின் உள்ள ஒரு கிராமத்திற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக தனது வீரர்களுடன் சென்றார்.செபாய் விக்ரம் மேஜர் முகுந்த் அவர்களின் போர்த்தோழர்.ஆங்கிலத்தில் Buddy என்பர்.அதாவது இருவரும் இணைந்து தான் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்வர்.அது வெற்றியாயினும் வீரமரணமாயினும் சரியே.தாக்குதல் நடத்த வேண்டிய வீட்டை முற்றுகை இட அதிகாரியான மேஜர் முகுந்த் அவர்களுக்கு உதவினார்.தன் நலம் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் பயங்கரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு கொண்டிருந்த மேஜருக்கு பாதுகாப்பு வழங்கினார்.ஆங்கிலத்தில் Cover fire எனக் கூறுவர்.அதாவது நமது நண்பர் பயங்கரவாதிகளுடன் தனது உடலை வெளியில் வைத்து நேரடியாக போரிடும் போது Buddy அவரை காப்பாற்றும்படி மற்றவற்றை கவனித்து கொள்வர் அல்லது இரண்டாம் ஆபத்துக்களில் இருந்து காப்பார்.இதையே தான் மேஜருக்கு செபாய் விக்ரம் செய்து கொண்டிருந்தார்.

மாலை 6 மணி நெருங்கிகொண்டிருந்தது.போர் முடியவில்லை.இரவில் ஆபத்து மிக அதிகம்.இருவரும் தரையில் தவழ்ந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வெளிப்புறவீட்டிற்கு சென்றனர்.இதே வேளையில் மேஜர் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தி படுகாயமடைந்திருந்தார்.மேஜர் படுகாயமடைந்திருந்ததை புரிந்துகொண்ட செபாய் விக்ரம் அவரை மீட்க துணிந்தார்.தனது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்னாள் பாய்ந்து அவரை மீட்க முயன்ற போது மூன்றாவது பயங்கரவாதி செபாய் விக்ரம் சிங் மீது சுட அவர் படுகாயமடைந்தார்.
இந்த நேரத்தில் மூன்றாவது பயங்கரவாதி தப்பிக்க முயல அவர்கள் மூன்றாவது பயங்கரவாதியையும் வீழ்த்தினர்.இதே நேரத்தில் செபாய் விக்ரம் அவர்களின் கழுத்திலும்,தலையிலும் தோட்டா பாய்ந்து பின் அவர் வீரமரணத்தை தழுவினார்.

 
அன்றைய நாளில் அவர்கள் மூன்று முக்கிய ஹிஸ்புல் பயங்கரவாதிகளை வீழ்த்தியிருந்தனர்.போரில் காட்டிய வீரம் மற்றும் சகவீரரை காப்பாற்றிய எடுத்த துணிச்சலான நடவடிக்கை காரணமாக வீரமரணத்திற்கு பிறகு செபாய் விக்ரம் அவர்களுக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

சிபாய் விக்ரம் அவர்களுக்கு சுசிலா என்ற மனைவியும் அபிசேக் என்ற மகனும் உள்ளனர்.