கேப்டன் ஆயுஷ் யாதவ்

பிறப்பு : கான்பூர்,உ.பி.

சேவை: இராணுவம்

தரம்: கேப்டன்

பிரிவு : 310 மீடியம் ரெஜிமென்ட்

ரெஜிமென்ட் : ரெஜிமென்ட் ஆப் ஆர்ட்டில்லரி

வீரமரணம்: ஏப் 27, 2017

கேப்டன் ஆயுஷ் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தவர்.உபி காவல்துறை ஆய்வாளரின் மகன் என்பதால் இளவயதிலேயே இராணுவத்தில் இணைய ஆர்வம் தானாக வந்தது.என்டிஏவில் நுழைந்தார்.பிறகு டிசம்பர் 30,2012ல் ஐஎம்ஏவில் நுழைந்து பயிற்சி பெற்றார்.

பயிற்சி முடித்த பிறகு கேப்டன் ஆயுஷ் ஆர்டில்லரி ரெஜிமென்டில் கன்னராக இணைந்தார்.அதன் பிறகு 2017ல் 310வது மீடியம் ரெஜிமென்ட் வழியாக காஷ்மீரின் குப்வாராவிற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சென்றார்.கேப்டன் கைதேர்ந்த குத்துச் சண்டை வீரர்.மூத்த அதிகாரிகளாலும்,சக வீரர்களாலும் மதிக்கப்பட்ட அற்புதமான வீரர்.

குப்வாரா தாக்குதல் 27 ஏப் 2017 


2017ல் கேப்டன் ஆயுஷின் இராணுவ பிரிவு குப்வாராவின் பன்ஸ்கம் பகுதியில் முகாமிட்டிருந்தது.பயங்கரவாதிகள் எளிதாக இந்தியாவிற்குள் ஊடுருவ பயன்படுத்தும் எல்லை குப்வாராவாக இருந்தது.பனி உருக தொடங்கிய நேரமான அன்றும் மூன்று நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் இராணுவ முகாம் நோக்கி வந்தனர்.அதிகாலை 4.30 முகாம் மீது தாக்குதலை தொடங்கினர் பயங்கரவாதிகள்.முகாமின் பின்புற வேலியை வெட்டி உள்நுழைந்து கிரேனடுகளை வீசி பயங்கர துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.அவர்கள் வேலியை வெட்ட முயலும் போதே சென்ட்ரி வீரர்கள் அவர்களை பார்த்துவிட்டனர்.இதை உணர்ந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி சுட்டு வீரர்கள் வாழும் பகுதி நோக்கி ஓடினர்.
தூக்கிகொண்டிருந்த கேப்டன் ஆயுஷ் சத்தம் கேட்டு விழித்து ஏதோ தவறு நடப்பதை உணர்ந்து கொண்டார்.தாமதிக்காமல் எழுந்து தனது ஏகே47 துப்பாக்கியை கையில் எடுத்தார்.வீரர்கள் வாழும் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் சென்றுவிட்டால் ஆபத்து என்பதை உணர்ந்த கேப்டன் பயங்கரவாதிகள் மீது சுட ஆரம்பித்தார்.சண்டையில் கேப்டன் மீது குண்டடிபட்டு அவர் படுகாயமடைந்தார்.இருந்தாலும் அவர் தொடர்ந்து சுட்டு பயங்கரவாதிகள் உள்நுழைவதை தடுத்துக் கொண்டிருந்தார்.இந்த சிறிய நேரம் சிறப்பு அதிரடி படை களத்தில் இறங்க போதுமானதாக இருந்தது.களத்தில் இறங்கிய வீரர்கள் பயங்கரவாதிகளை வேட்டையாடினர்.ஆனால் இந்த சண்டையில் கேப்டன் வீரமரணம் அடைந்தார்.கேப்டனுக்கு வயது வெறும் 26தான்.

தனது 26வது வயதில் கேப்டன் ஆயுஷ் உட்சபட்ச தியாகத்தை இந்த நாட்டிற்காக  தழுவினார்.

கேப்டன் ஆயுஷ் அவர்களுக்கு வீரவணக்கம்