மூன்று இராணுவ வீரர்கள் வீரமரணம்

கடந்த இரு நாட்களாக இந்திய இராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறது.உலகமே கொரானா அச்சத்தில் பதறி தவித்து வருகிறது.பாகிஸ்தானும் கூட கொரானா பாதிப்பில் உள்ளது.

இந்நிலையிலும் கூட பயங்கரவாதிகளை தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அனுப்ப தொடர்ந்து முயற்சித்து வருகிறது.ஆம் கொரானா தடுப்பு பணிகளில் நமது இராணுவ வீரர்களும் ஈடுபட்டு கடுமையான உழைந்து வருகின்றனர் எனினும் எல்லைப்பாதுகாப்பு பணிகளிலும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தெற்கு காஷ்மீரிை் பத்புரா பகுதியில் இராணுவம் நடத்திய அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

அதே போல இன்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை இந்திய இராணுவம் நடத்தியது.கேரன் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் கடுமையான முயற்சிகளை செய்தது.

இந்த முயற்சிகளை முறியடித்த இராணுவத்தின் வீரம்செறிந்த பயம் அறியாத நம்பிக்கை தூண்களான நமது வீரர்கள் வீரமுடன் பயங்கரவாதிகளை எதிர்கொண்டனர்.

இந்த சண்டையில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.எனினும் இது எளிதாக நடைபெற்றுவிடவில்லை.இதற்கான விலையையும் நமது வீரர்களே தர நேரிட்டது.முன்னதாக ஒரு வீரர் வீரமரணம் அடைந்து,2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

தற்போது வீரமரணம் அடைந்த வீரர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.மனதுக்கே இந்த விசயம் கவலை அளிப்பதாக உள்ளது.

வீரவணக்கம் வீரர்களே..உங்கள் தியாகம் அளவிடமுடியாதது.

ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.