நேற்று துல்லியமாக ராணுவம் நடத்திய பிரங்கி தாக்குதலின் ரகசியம் !!
1 min read

நேற்று துல்லியமாக ராணுவம் நடத்திய பிரங்கி தாக்குதலின் ரகசியம் !!

நேற்று காலை கேரன் செக்டாரில் இந்திய தரைப்படையின் பிரங்கி படைப்பிரிவினர் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியதை அனைவரும் அறிவோம்.

இத்தகைய தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதன் ரகசியம் ஷக்தி பிரங்கி தாக்குதல் கட்டளை மற்றும் கட்டுபாட்டு அமைப்பாகும் (SHAKTI ACCCS – SHAKTI ARTILLERY COMBAT COMMAND & CONTROL SYSTEM) ஆகும்.

இந்த அமைப்புடன் எதிரிகளின் ஆயுத நிலைகளை துல்லியமாக கண்டறியும் ஸ்வாதி ஆயுத கண்டுபிடிப்பு ரேடார் (SWATHI WLR – SWATHI WEAPON LOCATING RADAR). ஒருங்கிணைக்கப்பட்டு
உள்ளது.

இது முன்னனியில் இருக்கும் தளபதிகளின் நேரடி கட்டுபாட்டில் இயங்கும் அமைப்பாகும், இந்த அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள ராணுவ தரத்திலான கணிணிகள் மொத்த நடவடிக்கையையும் திறம்பட கண்காணிக்க மேற்பார்வையிட, கருவிகள் தானியங்கி முறையில் செயல்பட உதவுகிறது. இது
கோர் முதல் பேட்டரி அளவிலான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடக்க உதவுகிறது. மேலும் இது இந்திய தரைப்படை பயன்படுத்தி வரும் C3I அமைப்பின் ஒரு சிறு தொகுதி ஆகும். இதன் பணி என்னவென்றால் கோர் முதல் பேட்டரி அளவிலான பிரங்கி படையின் நடவடிக்கைகளை தானியங்கி முறையில் பிரங்கி படையின் தாக்குதல் கட்டுபாட்டு மையத்தில் (ARTILLERY FIRE CONTROL CENTER – ARTY FCC) இருந்து நடவடிக்கைகளை செயல்படுத்துவதாகும்.

இந்த ACCCS அமைப்பானது தரைப்படையின் TAC – C3I Gridன் ஒரு பகுதியாகும. இதனுடைய மூன்று முக்கிய மின்னனு கருவிகளாவன; தந்திரோபாய கணிணி, கையடக்க கணினி மற்றும் பிரங்கி நிலை காட்டும் கருவி ( TACTICAL COMPUTER, HAND HELD COMPUTER & GUN DISPLAY UNIT).

இதன் மூலம் தாக்குதலுக்கான கோரிக்கைகள் மேலாண்மை, இலக்கு கணக்கீடுகள், தொழில்நுட்ப கட்டுபாடு, தாக்குதல் கட்டுபாடு மற்றும் பிரங்கி/ ஷெல்களின் நகர்வு ஆகியவை நிர்வகிக்க படும். மேலும் இது தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான நடவடிக்கைகளையும் நிர்வகிக்கும் திறன் கொண்டது.