
வழக்கம்போல பனிக்காலத்தில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானுடைய அத்துமீறல் அதிகரித்துள்ளது.
இந்திய வீரர்களை திசைதிருப்ப தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க பாக் படைகள் மும்முரமாக இறங்கி உள்ளன. இதன் காரணமாக எல்லையோரம் சண்டை அதிகரித்துள்ளது.
இந்த மூன்று மாதங்களில் சுமார் 1,197 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் மார்ச் மாதம் மட்டுமே சுமார் 411 முறை பாக் தாக்குதல் நடத்தி உள்ளது.
ராணுவ அதிகாரிகள் கூறும்போது கடந்த வருடம் மார்ச் மாதத்தில் வெறும் 267 முறை தான் பாக் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆகவே இந்த வருடம் குறிப்பாக சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்ட பின் பாகிஸ்தான் கடும் விரக்தியில் உள்ளதாகவும் இதனால் தாக்குதல்கள் அதிகரிக்க உள்ளது என்பதையே இது காட்டுகிறது ஈன கூறுகின்றனர.
இந்த வருடத்தில் இது வரை 41 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படைகளால் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வருடத்தில் 6 காஷ்மீர் இளைஞர்களை மட்டுமே அவர்களால் மூளைச்சலவை செய்து ஈர்க்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் இருவர் அனந்த்னாக் , இருவர் ஷோபியான், ஒருவன் குல்காம் மற்றும் ஒருவன் புல்வாமா பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.