விடுமுறையில் இருந்த வீரரை கடத்திய பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்பு படைகள்

  • Tamil Defense
  • April 24, 2020
  • Comments Off on விடுமுறையில் இருந்த வீரரை கடத்திய பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்பு படைகள்

காஷ்மீரின் சோபியானில் விடுமுறையில் இருந்த காஷ்மீர் காவல் துறை வீரரை பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் பிறகு அதிரடியாக களத்தில் இறங்கிய பாதுகாப்பு படைகள் ஆபரேசன் நடத்தி அந்த வீரரை மீட்டுள்ளனர்.

கிடைத்த தகவல்படி,ஸ்ரீநகரில் இருந்து பணிசெய்யும் ஜாவித் ஜாபர் என்றும் வீரர் விடுமுறையில் சோபியானில் மிங்கிபோரா பகுதியில் தனது வீட்டுற்கு சென்றுள்ளார்.பின்பு அங்கிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இந்த தகவல் கிடைத்த உடனயே காஷ்மீர் காவல் படைகள் அவரை மீட்கவும் அவரை கடத்தியவர்களை பிடிக்கவும் களமிறங்கியது.

தற்போது அந்த காவல் துறை வீரர் மீட்கப்பட்டதாகவும் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.