குப்வாரா என்கவுண்டர் : அட்டாரி – வாகா எல்லை வழியே பாகிஸ்தானுக்கு சென்ற பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • April 9, 2020
  • Comments Off on குப்வாரா என்கவுண்டர் : அட்டாரி – வாகா எல்லை வழியே பாகிஸ்தானுக்கு சென்ற பயங்கரவாதிகள் !!

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று ஊடுருவிய 5 பயங்கரவாதிகளை 4ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் தங்களது உயிரை கொடுத்து வீழ்த்தியது அனைவருக்கும் தெரியும்.

தற்போது இந்த 5 பயங்கரவாதிகளின் பின்னனி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களின் அடையாளம் கண்டுபிடிக்க பட்டுள்ளது.

இவர்களில் மூவர் காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஆவர்,

1) சஜ்ஜாத் அஹமது ஹர்ராஹ் – ஷோபியான் பகுதியில் உள்ள தரம்தோராவை சேர்ந்தவன்.

2) ஆதில் ஹூசைன் மிர் – அனந்த்னாக் பகுதியில் உள்ள மல்போராவை சேர்ந்தவன்.

3) உமர் நசீர் கான் – அனந்த்னாக்.

இவர்களில் சஜ்ஜாத் மற்றும் ஆதில் ஆகியோர் காணவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போது சஜ்ஜாத் (பாஸ்போர்ட் எண் N6689233) மற்றும் ஆதில் ( பாஸ்போர்ட் எண் P9403541) ஆகியோர் அட்டாரி வாகா எல்லை வழியாக முறையே ஏப்ரல் 12, 2018 மற்றும் ஏப்ரல் 27, 2018 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானுக்கு சென்றுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் ஆதிலுடைய கிராமத்தை சேர்ந்த உமர் நசீரின் பயண விவரங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

உளவுத்துறை வட்டார தகவல்களின்படி இந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதம் செய்ய ஊக்கம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவன் குலாம் நபி கான் எனும் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தின் துணை தளபதி ஆவான். இவனும் அனந்த்னாக்கை பூர்வீகமாக கொண்டவன். தற்போது பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருந்து செயல்பட்டு வருகிறான்.

மேலும் பாக் ஐ.எஸ்.ஐ உதவியுடன் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதின் போன்ற இயக்கங்கள் முதலில் காஷ்மீர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதத்தின்பால் ஈர்க்கின்றனர். பின்னர் காஷ்மீரில் எல்லை கட்டுபாட்டு கோடை ஊடுருவி பாக் செல்வது அல்லது நல்லெண்ண அடிப்படையில் இயங்கும் வசதிகளை பயன்படுத்தி நியாயமான முறையில் பாக் செல்வது, அதன் பின்னர் அங்கு பயிற்சி பெற்று எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியே ஆயுதங்களுடன் ஊடுருவி வந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கடந்த மூன்று மாத காலத்தில் எல்லை கட்டுபாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற 50பயங்கரவாதிகளை தரைப்படையினர் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்.