தென்சீன கடலில் அதிகரிக்கும் பதற்றம் !!

  • Tamil Defense
  • April 23, 2020
  • Comments Off on தென்சீன கடலில் அதிகரிக்கும் பதற்றம் !!

தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் 5ஆவது தாக்குதல் படையணி சீனாவுக்கு எதிராக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது ஏற்கனவே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

மேலும் கடந்த இரண்டு வாரங்களாக மலேசியா அருகில் உள்ள மேற்கு கபெல்லா மகுதியில் மலேசியா மற்றும் சீனாவுக்கு இடையில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.

இதில் மலேசியாவுக்கு ஆதரவாக அமேரிக்கா தனது கடற்படை கப்பல்களை களமிறக்கியது. சுமார் 850சதுர கிமீ பகுதியில் ஏறத்தாழ 8 சீன மற்றும் அமேரிக்க கடற்படை கப்பல்கள் குவிந்திருந்த நிலையில் நேற்று காலையில் ஆஸ்திரேலிய கடற்படையின் அன்ஸாக் ரகத்தை சேர்ந்த ஹெச்.எம்.ஏ.எஸ். பர்ராமட்டா எனும் ஃரிகேட் ரக போர்கப்பல் அமெரிக்க படைகளுடன் இணைந்துள்ளது.

ஏற்கனவே சீனாவில் லியானிங் விமானந்தாங்கி கப்பல், அமெரிக்காவின் வாஸ்ப் ரக யு.எஸ்.எஸ் அமெரிக்கா எனும் நிலநீர் விமானந்தாங்கி கப்பல் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கப்பலின் வருகையும் பதற்றத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.