பாக்கை கதறவிட மறுஉருவம் எடுக்கும் தேஜஸ்; உலகின் அதிஅற்புத நான்கு ஏவுகணையுடன் வருகிறது

  • Tamil Defense
  • April 2, 2020
  • Comments Off on பாக்கை கதறவிட மறுஉருவம் எடுக்கும் தேஜஸ்; உலகின் அதிஅற்புத நான்கு ஏவுகணையுடன் வருகிறது

தேஜாஸ் விமானத்தின் பலமான 4 ஏவுகணைகள் !!

இந்திய விமானப்படையின் தேஜாஸ் மார்க் 1ஏ விமானங்கள் தற்போது பல வகையான (AAM – Air to Air Missile ) வான் தாக்குதல் ஏவுகணைகளை பெறுவது உறுதியாகிறது.

தேஜாஸ் மார்க் 1ஏ விமானத்தில் நமது சொந்த தயாரிப்பான அஸ்திரா BVR ஏவுகணை பொருத்தப்படும் மேலும் இஸ்ரேலின் டெர்பி BVR ஏவுகணைகள் பொருத்தப்படும் இதற்கான சோதனை வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் சிறப்பாக இஸ்ரேல் தனது ஐ-டெர்பி இ.ஆர் BVR ஏவுகணைகளை (I – DERBY Extended Range BVRAAM) வழங்க தயார் என அறிவித்துள்ளது. இது தேஜாஸ் மார்க் 1ஏ விமானத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள இலா 2052 ஏசா ரேடார் மற்றும் இலா 2032 தாக்குதல் கட்டுபாட்டு அமைப்புடனும் சிறப்பாக இணைந்து செயல்படும் ஆற்றல் கொண்டது.

மேலும் இந்திய விமானப்படை தேஜாஸ் மார்க்1ஏ விமானத்தில் MBDA ASRAAM ஏவுகணைகளை பொருத்தவும் திட்டமிட்டு உள்ளது. இது WVR – Within Visual Range ஏவுகணைகயாக செயல்படும்.இதனுடன் ரஷ்ய ஆர்73 WVR ஏவுகணையும் பொருத்தப்படும்.

இந்த நான்கு தனித்துவமிக்க ஏவுகணைகளையும் தேஜாஸ் மார்க் 1ஏ சுமப்பது அதனை உலகின் தனித்துவமான போர் விமானங்களில் ஒன்றாக மாற்றுகிறது காரணம் இத்தனை வகையான் வான்வழி தாக்குதல் ஏவுகணைகளை (AIR to AIR MISSILES) அது சுமக்கும் திறனை பெற்றுள்ளது.

மேலும் இந்த ஏவுகணைகள் எதிரி விமானத்தின் மீது கூட்டாக அதாவது இரண்டு அல்லது அதற்கு மேலான ஏவுகணைகள் ஒரு நேரத்தில் ஏவப்பட்டால் (COMBO ATTACK) எதிரி விமானியால் அவற்றில் இருந்து தப்பிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகும்.