இந்திய எதிர்ப்பு நிலை கொண்ட முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதிர் பின் மொஹம்மது தற்போது பதவி விலகியதை அடுத்து தற்போது மலேசிய பிரதமராக பதவி ஏற்றுள்ள முஹியிதின் யாசின் இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறார். இதன் மூலம் மறுபடியும் இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தத்தில் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ” மலேசிய விமானப்படைக்கான இலகுரக போர் விமான ஒப்பந்த சோதனையில் நமது தேஜாஸ் போட்டியில் இருந்த மற்ற விமானங்களை விட சிறப்பாக செயல்பட்டது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை பறக்கும் போது சிறப்பாக பறந்தது” என்றார்.
மலேசிய ஒப்பந்தத்தில் 36 இலகுரக விமானங்களை வாங்க விரும்புகிறது. இதில் நமது தேஜாஸ், கொரியாவின் FA50, Leonardo M346, Avro Vodochody L-39G, CAC L15 A/B, CAC/PAC JF17, SAAB Gripen மற்றும் YAK 130.