தைவான் ஏவுகணை சோதனை; சீனாவுக்கு மற்றொரு செக் !!

  • Tamil Defense
  • April 28, 2020
  • Comments Off on தைவான் ஏவுகணை சோதனை; சீனாவுக்கு மற்றொரு செக் !!

தைவான் நாடு இந்த மாத ஆரம்பத்தில் பிங்டுங் கவுன்டியில் அமைந்துள்ள ஜியபெங் ராணுவ தளத்தில் இந்த சோதனைகளை நடத்தி உள்ளது.

சோதனை செய்யப்பட்ட க்ருஸ் ஏவுகணையின் பெயர் யுன் ஃபெங் ஆகும். சுமார் 1500கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ள இது மத்திய சீனாவில் அமைந்துள்ள பல்வேறு ராணுவ தளங்கள் துறைமுகங்கள் ஆகியவற்றை தாக்க உதவும்.

தைவான் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது சீன மக்கள் விடுதலை விமானப்படை ஆகும்.

போர் வந்தால் சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்களை இந்த ஏவுகணையால் தைவான் தாக்கி மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கலாம்.

இந்த ஏவுகணை ரேம் ஜெட் என்ஜினை கொண்டுள்ளது மேலும் கவச அழிப்பு மற்றும் ஃப்ராக்மென்டெஷன் வெடிகுண்டுகளை சுமக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த ஏவுகணையானது விரைவில் மிகப்பெரிய அளவில் தயாரிப்பு நிலையை எட்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.