கொரானா தாக்கம் எதிரொலி; இராணுவ வீரர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்

நாடு முழுதும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது.கொரனா நோயின் தாக்கமும் குறைந்த பாடில்லை.இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விமானம்,ரயில் மற்றும் வாகனப்போக்குவரத்து என அனைத்தும் முழுதும் நிறுத்தப்பட்டன.இதனால் இராணு வ வீரர்களுக்கும் மிகுந்த சிரமம் ஈற்பட்டது.

அதாவது விடுமுறைக்காக வீடு வந்திருந்த இராணுவ வீரர்கள் பணிக்கு திரும்புவது சிரரமான காரியமாக மாறியது.இதனை சரிசெய்ய வீரர்களுக்கு மட்டும் சிறப்பு தனி இரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பெங்களூரூ ரயில்வே நிலையத்தில் 950 இராணுவ வீரர்களுடன் கிளம்பியது இந்த ரயில்.இவர்கள் அனைவரும் வடக்கு இராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.

அடுத்ததாக இரண்டாவது கட்டமாக கிழக்கு படைப்பிரிவுக்கு செல்லும் வீரர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.