COVID19 தரச்சோதனையில் சீனா வழங்கிய பாதுகாப்பு உடைகள் தோல்வி!!

  • Tamil Defense
  • April 16, 2020
  • Comments Off on COVID19 தரச்சோதனையில் சீனா வழங்கிய பாதுகாப்பு உடைகள் தோல்வி!!

இந்தியாவுக்கு சீனா சமீபத்தில் சுமார் 1,70,000 தற்காப்பு உடைகளை வழங்கியது. இந்த உடைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரொனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட இருந்த நிலையில் இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

FDA/CE தரச்சான்றிதழ் பெறாத தற்காப்பு உடைகள் இந்தியாவில் சோதனை செய்யப்படும்.இதன்படி குவாலியிரில் அமைந்துள்ள (DRDO) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டன.

இந்த சோதனையில் 1,70,000 உடைகளில் சுமார் 50,000 உடைகள் தோல்வி அடைந்துள்ளன. மேலும்,இதை தவிர தனித்தனியாக இரண்டு சிறிய தொகுதிகாளாக வந்த 40,000 உடைகளும தரச்சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.

நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் நிலையில் அவசர நிலை காரணமாக சுமார் 10லட்சம் தற்காப்பு உடைகள் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்களை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
மே முதல் வாரத்தில் நாம் இந்த உடைகளை நம் நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது 20லட்சம் பாதுகாப்பு உடைகள் இருந்தால் நம்மால் நிலைமையை சமாளிக்க முடியும் என்கின்றனர்.

நமது நாட்டில் DRDO தயாரித்துள்ள உடைகள் ஒரு நாளைக்கு சுமார் 30,000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது.